என்னுடைய பிரஜாவுரிமையை இல்லாமலாக்கப் போவது குறித்து குழப்பமடைய மாட்டேன் எனவும், என்னுடைய குடியுரிமையைப் பறிப்பதாக இருந்தால் நாட்டு மக்கள் அனைவரினதும் குடியுரிமையை அரசாங்கம் பறிக்க வேண்டியிருக்கும் எனவும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ குறிப்பிட்டார்.
பத்தரமுல்லையில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு ஊடகவியலாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்குப் பதிலளிக்கையில் அவர் இதனைக் கூறினார்.
முன்னாள் பிரதமர் சிறிமாவோ பண்டாரநாயக்கவின் குடியுரிமையைப் பறித்தது போன்று தங்களது பிரஜா உரிமையையும் பறிக்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்துவருவதாக உள்ளக வட்டாரங்களில் தெரிவிக்கப்படுவது குறித்து மஹிந்த ராஜபக்ஷவிடம் ஊடகவியலாளர் ஒருவர் வினவிய போதே அவர் இவ்வாறு பதிலளித்தார்.

