Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

உரிய நேரத்தில் சிகிச்சை வழங்கப்படாததால் ஒருவர் உயிரிழப்பு

August 21, 2017
in News
0

கிளிநொச்சி மாவட்ட பொது வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்ட நோயாளிக்கு உரிய நேரத்தில் சிகிச்சை வழங்கப்படாததால் அவர் உயிரிழந்தமை தொடர்பான விசாரணைகளை முன்னெடுத்து வருவதாக கிளிநொச்சி பிராந்திய சுகாதார வைத்திய அதிகாரி தெரிவித்துள்ளார்.
கிளிநொச்சி – ஆனந்தபுரத்தில் இருந்து கடந்த 18ஆம் திகதி இரவு அவசர சிகிச்சை தேவைப்பட்ட நோயாளி ஒருவரை கிளிநொச்சி மாவட்ட பொது வைத்தியசாலைக்குக் கொண்டு சென்றபோது, அங்கு உரிய தருணத்தில் சிகிச்சை வழங்கப்படாததால் குறித்த நோயாளி உயிரிழந்துள்ளார்.
குறித்த சம்பவம் தொடர்பில் உயிரிழந்த நோயாளியின் உறவினர்கள் கருத்துத் தெரிவிக்கையில்,
ஆனந்தபுரம் பகுதியில் உள்ள எமது வீட்டிலிருந்து நோயாளியை கடந்த 18ஆம் திகதி இரவு 9.45 மணியளவில் வைத்தியசாலைக்கு கொண்டு சென்றோம். அவரது உடல்நிலையை கருத்திற்கொண்டு அவசர சிகிச்சைப்பிரிவிற்கு கொண்டு சென்றிருந்தோம்.
இதன்போது அங்கு ஒரு ஆண் உத்தியோகத்தர் உட்பட நான்கு பேர் கடமையில் இருந்தனர். இருப்பினும் நோயாளிக்கு சிகிச்சை வழங்காது வெளியேற்றி விட்டனர்.
இதனையடுத்து வெளிநோயாளர் பிரிவில் பதிவுகளை மேற்கொண்டு வெளிநோயாளர் பிரிவு வைத்தியரிடம் காட்டுமாறு தெரிவித்தனர். இந்த நிலையில் நோயினால் பாதிக்கப்பட்ட நபர் இரவு 11.25 மணிக்கு சிகிச்சைகளுக்காக அவசர சிகிச்சைப் பிரிவிற்கு எடுக்கப்பட்ட போது உயரிழந்து விட்டார் என தெரிவித்துள்ளனர்.
அவசர சிகிச்சைப்பிரிவில் கடமையில் இருந்த வைத்தியர் மற்றும் உத்தியோகத்தர்களின் அசமந்தப்போக்கே தங்களுடைய தந்தை இறப்பதற்கு காரணமாக இருந்தது என உயிரிழந்தவரின் பிள்ளைகள் தெரிவித்துள்ளனர்.
உரிய நேரத்தில் சிகிச்சை வழங்கப்பட்டிருந்தால் தங்களுடைய தந்தையைக் காப்பாற்றப்பட்டிருக்கலாம் என்றும் கண்ணீர் மல்கத் தெரிவித்துள்ளனர்.
குறித்த சம்பவத்தில் கிளிநொச்சி ஆனந்தபுரத்தைச் சேர்ந்த 55 வயதுடைய கந்தையா நிர்மலன் என்பவரே உயிரிழந்துள்ளார்.
இவ்விடயம் தொடர்பில், கிளிநொச்சி மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் கார்த்திகேயன்-உயிரிழந்தவரின் உறவினர்களால் மேற்கொள்ளப்பட்ட முறைப்பாடு தொடர்பில் வைத்தியசாலையில் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன என தெரிவித்துள்ளார்.

Previous Post

வீட்­டொன்­றில் நிறுத்தி வைக்­கப்­பட்­டி­ருந்த முச்­சக்­கர வண்டி திடீ­ரெ­னத் தீப்­பற்றி எரிந்­தது.

Next Post

மகளை பலாத்காரம் செய்த தந்தை

Next Post
மகளை பலாத்காரம் செய்த தந்தை

மகளை பலாத்காரம் செய்த தந்தை

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • Trending
  • Comments
  • Latest
வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

May 20, 2022
ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

March 8, 2023
கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

June 6, 2023
ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

July 28, 2023
இராணுவ ஆட்சியின் பக்கம் நாடு பயணிப்பதை தடுக்க வேண்டும் – அநுரகுமார

மக்களின் எதிர்ப்பை தாக்குப்பிடிக்க முடியாத ‘கோட்டா ‘பதுங்கு குழியில் | அனுரகுமார

50,000 டொலர்களுக்கு மேலாக சரவணபவன் என்ற உணவகத்தின் சார்பாக அதன் தலைவர் மாண்புமிகு திரு கணேஷன் சுகுமார் அவர்கள் வைத்தியசாலை அதிகாரிகளிடம் அந்த நிதி உதவியினை வழங்கியிருப்பதனையும் இவ்வாறான நிதி அன்பளிப்பு செய்யும் நடவடிக்கை தொடர்ந்து சரவணபவன் என்ற உணவகத்தினால் மேற்கொள்ளப்பட்டு வருவது பாராட்டுதல்களுக்குரியதாகும்.

கனடாவில் மட்டுமன்றி உலகளாவியரீதியில் பல கிளை நிறுவனங்களை கொண்ட Skymoon Travels and Tours என்ற நிறுவனத்தின் உரிமையாளரும் பிரபல தொழில் அதிபருமான Andrew அவர்களின் அதீத ஆசையின் பிரகாரமே LUCID NIGHTSஇசைக்குழு என்ற ஆரம்பிக்கப்பட்டது.

கொவிட் வைரஸின் புதிய பிறழ்வு ‘நியோகோவ்’ குறித்து வுஹான் விஞ்ஞானிகள் எச்சரிக்கை

கொரோனா தொற்று பாதிப்புக்கு பிறகு அதிகரிக்கும் சர்க்கரை நோய், ஞாபக மறதி, சுவாச பிரச்சினைகள் | அப்போலோ மருத்துவர்கள்

ஆசிய விளையாட்டு விழாவில்  தங்கப் பதக்கத்துக்கான மகளிர் ரி20 கிரிக்கெட் இறுதிப் போட்டியில் இலங்கை 

ஆசிய விளையாட்டு விழாவில்  தங்கப் பதக்கத்துக்கான மகளிர் ரி20 கிரிக்கெட் இறுதிப் போட்டியில் இலங்கை 

September 20, 2026
நல்லூரில் உணர்வெழுச்சியுடன் நடைபெற்ற திலீபனின் 6ஆம் நாள் நினைவேந்தல்

நல்லூரில் உணர்வெழுச்சியுடன் நடைபெற்ற திலீபனின் 6ஆம் நாள் நினைவேந்தல்

September 20, 2026
பூண்டுலோயா – நுவரெலியா பிரதான வீதியின் டன்சினன் பகுதியில் மண்சரிவு ; போக்குவரத்து பாதிப்பு 

பூண்டுலோயா – நுவரெலியா பிரதான வீதியின் டன்சினன் பகுதியில் மண்சரிவு ; போக்குவரத்து பாதிப்பு 

September 20, 2026
நீர்நிலைகளில் மூழ்கி சிறுவர்கள் இருவர் மாயம்

நீர்நிலைகளில் மூழ்கி சிறுவர்கள் இருவர் மாயம்

September 20, 2026

Recent News

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures