புதிய அரசமைப்பு உருவாக் கத்தில் ஏற்பட்டுள்ள தேக்க நிலை தொடர்பில் அரச தலை வர் மைத்திரிபால சிறிசேனவுடன் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இன்று பேசவுள்ளது. இதற்காக நேரம் ஒதுக் கித் தருமாறு கேட் டுப் பல நாள்களாகிவிட்டபோதும்இ அரச தலைவரைச் சந்திக்கக் கிடைத்திருக்கும் வாய்ப்பைப் பயன்படுத்தி கூட்டமைப் பின் நிலைப்பாட்டை அதன் தலை வர் இரா. சம்பந்தன் இறுக் கமாக இடித்துரைப்பார் என்று தெரி கிறது.
சிறிலங்கா சுதந்திரக் கட்சி மற்றும் ஐக்கிய தேசியக் கட்சி ஆகிய இரு முக்கிய கட்சிகளினதும் முக்கிய பிரதிநிதிகள் மற்றும் தலைவர்கள் ஆகியோர் அமர்ந் திருக்கும் போதே அரச தலை வருடன் இந்த விட யம் குறித்துப் பேசித் தீர்க்கமான ஒரு முடிவுக்கு வருவதற்குத் தமிழ்த் தேசியக் கூட் டமைப்புத் திட்டமிட்டுள்ளது.
அரசமைப்பின் 20ஆவது திருத் தம் குறித்து ஆராய்வதற்காக அனைத்துக் கட்சித் தலைவர்க ளையும் பிரதிநிதிகளையும் அழைத்து இந்தக் கூட்டம் ஏற் பாடு செய்யப்பட்டபோதும் அர சமைப்பு உருவாக்கப் பணியை விரைந்து முடிப்பதற்கு இடை யூ றாக உள்ள சகல முட்டுக்கட்டை களையும் நீக்குவது தொடர்பில் இன்றைய பேச்சில் ஆராயப்படும் என்று கூட்டமைப்பு வட்டாரங்கள் தெரிவித்தன.
இந்தச் சந்திப்பில் புதிய அரசமைப்பு மற்றும் 20ஆம் திருத்தம் தொடர்பில் மாத்திரமே பேசப்படும் என்றும்இ காணி விடுவிப்புஇ காணாமல் ஆக்கப்பட்டோர் பிரச்சினை உள்ளிட்ட ஏனைய விடயங்கள் பிறிதொரு சந்தர்பத்திலேயே ஆராயப்படும் என்று தெரிவிக்கப்படுகின்றது.
20ஆம் திருத்தச் சட்டவரைவு தொடர்பில் அரச தலைவர் மைத்திரிபால சிறிசேன அனைத்துக் கட்சித் தலைவர்களையும் அழைத்துப் பேசுவதற்கு கடந்த வியாழக்கிழமை திட்டமிட்டிருந்தார். இறுதி நேரத்தில் அந்தச் சந்திப்பு நிறுத்தப்பட்டது. இன்றைய தினம் அந்தச் சந்திப்பு நடைபெறவுள்ளது.
சிறிலங்கா சுதந்திரக் கட்சியினர்இ அந்தக் கட்சியின் தலைவர் மைத்திரிபால சிறிசேனஇ ஐக்கிய தேசியக் கட்சியினர்இ அந்தக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க ஆகியோர் இன்றைய கூட்டத்தில் பங்கேற்பார்கள்.
இந்த மாத இறுதிக்குள் நாடாளுமன்றத்துக்கு சமர்பிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்பட்ட இடைக்கால வரைவு இன்னமும் சமர்பிக்கப்படாமல் இழுத்தடிப்பது தொடர்பில் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தனது கடுமையான நிலைப்பாடுகளைத் இடித்துரைப்பார் என்று தெரியவருகின்றது.

