எதிர்வரும் ஓகஸ்ட் மாதம் 30 ஆம் திகதி சைட்டத்திற்கு எதிராக ‘சைட்டம் தீப்பற்றிய இரவு’ என பெயரிட்டு பாரிய போராட்டம் மேற்கொள்ளப்படவுள்ளதாக அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் (GMOA) தெரிவித்துள்ளது.
கொழும்பில் நேற்று(16) இடம்பெற்ற ஊடக சந்திப்பில் உரையாற்றிய சங்கத்தின் உப செயலாளர் நவீன் டி சொய்சா தெரிவித்துள்ளார்.
சர்ச்சைக்குரிய மாலபே, தனியார் மருத்துவ கல்லூரி தொடர்பில் ஏற்பட்டுள்ள பிரச்சினைகளை தீர்த்து தீர்வு பெற்று தருவதற்கு அரசாங்கம் இதுவரையில் முன்வரவில்லை.
அமைச்சர் ராஜித்த சேனாரத்தினவுக்கு விருப்பமான வகையில் 2500 இலட்சம் ரூபாய் செலவு செய்து நெவில் பெர்ணாண்டோ மருத்துவமனையை அரசுக்கு இணைத்து கொள்ள தயாராகிறார்.
இந்நிலையில், ஓகஸ்ட் மாதம் 30 ஆம் திகதியை ‘சைட்டம் தீப்பற்றிய இரவு’ என பெயரிட்டு போராட்டம் மேற்கொள்ள தீர்மானிக்கப்பட்டுள்ளதோடு, அடுத்த வாரம் முதல் அராங்கத்திற்கு எதிராக பல தொழிற்சங்க போராட்டங்களையும் முன்னெடுக்கவுள்ளளோம் என அவர் மேலும் கூறியுள்ளார்.