தனங்களப்பு கேரதீவு வீதியில் இன்று காலை இடம்பெற்ற விபத்தில் முதியவர் ஒருவர் காயமடைந்துள்ளார்.
கைதடி – நாவற்குழியைச் சேர்ந்த பண்டாரி யோகராசா (வயது-71) என்பவரே காயமடைந்த நிலையில், சாவகச்சேரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு மேலதிக சிகிச்சைக்காக யாழ்.போதனா மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.
குறித்த முதியவர் கேரதீவுப் பகுதியில் உள்ள வயலைப் பார்த்து வரச் சென்ற வேளையில் வாகனத்தினால் மோதுண்டு காயமடைந்த நிலையில் காணப்பட்டுள்ளார்.
அவ்வழியே வாகனத்தில் வந்த சிலர் காயமடைந்த நிலையில் காணப்பட்ட முதியவரை சாவகச்சேரி மருத்துவமனையில் அனுமதித்தனர்.
சம்பவம் தொடர்பில் சாவகச்சேரி பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர் எனவும் தெரிவிக்கப்பட்டது.