உயர் கல்வி மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சு, திருகோணமலை பட்டினமும் சூழலும் பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள இரண்டு வீதிகளை அபிவிருத்தி செய்ய 142 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கீடு செய்துள்ளது.
சர்தாபுர கன்னியா கோயில் வீதியை மறுசீரமைக்க 78.71 மில்லியன் ரூபாவும், கன்னியா இலுப்பைக்குளம் உள் வீதியில் வவுனியா பாதையிலிருந்து நிலாவெளி வரையான வீதியை கொங் கி்றீட் போட்டு மறுசீரமைக்க 64.09 மில்லியன் ரூபாவும் ஒதுக்கப்பட்டுள்ளன.