ஜனாதிபதித் தேர்தலையும் பாராளுமன்ற பொதுத் தேர்தலையும் ஒன்றாக நடாத்துவது குறித்து அரசாங்கம் கலந்துரையாடல்களை முன்னெடுத்து வருவதாக அமைச்சரவைப் பேச்சாளர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார்.
சகல மாகாண சபைகளுக்குமான தேர்தலை ஒரே தினத்தில் நடாத்த நடவடிக்கை எடுப்பதாக அரசாங்கம் கடந்த தேர்தலின் போது வாக்குறுதி அளித்திருந்தது. ஒரே தேர்தலை பல தடவைகள் நடாத்துவதனால் பணம் மற்றும் மக்களின் நேரம் என்பன வீண் விரயமாக்கப்படுவதாகவும் அவர் நேற்று (16) நடைபெற்ற அமைச்சரவைத் தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பில் சுட்டிக்காட்டியுள்ளார்.