Wednesday, August 27, 2025
Easy 24 News
Advertisement
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
Easy 24 News
No Result
View All Result
Home News

ஜேர்மனியில் 22 முறை கத்தியால் குத்தி படுகொலை செய்யப்பட்ட இலங்கை தமிழ் பெண்!

August 16, 2017
in News, World
0

ஜேர்மனியில், இலங்கை தமிழ் பெண்ணொருவர் கொடூரமான முறையில் படுகொலை செய்யப்பட்டுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.

ஜேர்மனியில் புகலிடம் கோரிய அன்டனி எனப்படும் நைஜீரிய நாட்டவரே தனது காதலியான தமிழ் பெண் ஒருவரை கத்தியால் குத்தி கொலை செய்துள்ளார்.

இந்த வருடத்தின் ஆரம்பத்தில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ள நிலையில் நேற்றைய தினம் வழக்கு விசாரணை இடம்பெற்றுள்ளது.

22 வயதான ஜேர்மன் மாணவியான சோபிக்கா பரமநாதன், 28 வயதான அன்டனியினால் கொடூரமாக படுகொலை செய்யப்பட்டதாக வழக்கறிஞர்கள் தெரிவித்துள்ளார்.

அன்டனியின் முழுப்பெயரை ஜேர்மன் பொலிஸார் வெளியிடவில்லை. ஜேர்மன் பத்திரிகை ஒன்று வெளியிட்ட அறிக்கைக்கமைய, அன்டனி நீதிமன்றத்தில் ஊமையாக இருந்துள்ளார்.

கடந்த பெப்ரவரி மாதம் 11ஆம் திகதி சோபிக்காவை அன்டனி தாக்கியுள்ளார். அதன் பின்னர் சோபிக்கா அன்டனியுடனான உறவை துண்டித்துள்ளதாக வழக்கறிஞர் தெரிவித்துள்ளார்.

அதனைத் தொடர்ந்து அன்டனி நீண்ட கத்தியால் சோப்பிக்காவின் தலை, கழுத்து மற்றும் மார்பகங்களில் குத்தி கொலை செய்துள்ளார். 22 தடவைகள் சோபிக்காவை அன்டனி கத்தியால் குத்தியுள்ளதாக வழக்கறிஞர் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளார்.

தெரு ஒன்றில் அன்டனி ஒரு பெரிய சூட்கேஸில் சோபிக்காவின் சடலத்தை மறைத்துள்ளதாக சம்பவத்தை நேரில் கண்ட ஒருவர் தெரிவித்துள்ளார்.

அதனைத் தொடர்ந்து அவர் அங்கிருந்து தப்பிச் சென்று இரண்டு நாட்களின் பின்னர் சுவிட்ஸர்லாந்தில் வைத்து பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார்.

இந்த கொலை சம்பவம் இடம்பெறுவதற்கு முன்னர் தனது மகள், அன்டனியினால் அச்சுறுத்தப்பட்டதாக சோபிக்காவின் தந்தை சிவசம்பு தெரிவித்துள்ளார்.

அன்டனி மற்றும் சோபிக்க ஜோடி 2016 ஆம் ஆண்டு ஜேர்மனியில் அஹோஸ் நகரில் உள்ளூர் அகதிகள் இல்லத்தில் சந்தித்துள்ளனர். அங்கு அன்டனி வாழ்ந்து வந்துள்ளார். சோபிக்கா அங்கு தன்னார்வ தொண்டு செய்து வந்துள்ளார்.

இத்தாலியில் மூன்று ஆண்டுகள் வாழ்த்துள்ள நிலையில் 2015 ஆம் ஆண்டில் அன்டனி ஜேர்மனிக்கு சென்றுள்ளார்.

ஓரினச்சேர்க்கையாளராக இருப்பதனால் 2012 இல் தனது நாட்டை விட்டு வெளியேற வேண்டிய கட்டாயம் ஏற்பட்டதாகவும், நைஜீரியாவில் உள்ள இஸ்லாமிய பயங்கரவாத குழுவான போகோ ஹராமுக்கு எதிராக தான் போராடியதாகவும், அன்டனி தனது புகலிட கோரிக்கை விண்ணப்பத்தில் குறிப்பிட்டுள்ளார்.

எனினும் அவர் போலியான தகவல்களை குறிப்பிட்ட காரணத்தினால் அவரது விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டது.

எதிர்வரும் செப்டம்பர் மாதம் 20ஆம் திகதி அன்று அவருக்கு வாழ்நாள் சிறைத்தண்டனை விதிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

சோபிக்கா ஒரு சிறந்த பெண்ணாக காணப்பட்டுள்ளார். தனது பிறந்த நாள் அன்று இலங்கையில் வாழும் வீடற்ற மக்களுக்கு உதவி பொருட்களை அவர் அனுப்பி வைத்ததாக சோபிக்காவின் வழக்கறிஞர் Hans-Peter Maas தெரிவித்துள்ளார்.

தனது குடும்பத்துடன் இலங்கையிலிருந்து ஜேர்மனிக்குச் சென்றிருந்த சோபிக்கா பல வருடங்களாக அஹோஸ் நகரில் வசித்து வந்துள்ளார். குழந்தைகளுடன் வேலை செய்ய வேண்டிய அவசியம் அவருக்கு காணப்பட்டதாகவும் ஊடகம் மேலும் தகவல் வெளியிட்டுள்ளது.

Previous Post

கிழக்கு மாகாண சபை இன்னும் இரண்டு மாதங்களில் கலைக்கப்படும்

Next Post

விடுமுறையில் உதைப்பந்தாட்ட வீரர்களை சந்தித்த மக்ரோன்!

Next Post
விடுமுறையில் உதைப்பந்தாட்ட வீரர்களை சந்தித்த மக்ரோன்!

விடுமுறையில் உதைப்பந்தாட்ட வீரர்களை சந்தித்த மக்ரோன்!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures