கொக்குவில் மேற்குப் பகுதியில் இன்று காலை இளைஞர் ஒருவர் விசேட அதிரடிப் படையினரால் கைது செய்யப்பட்டுள்ளார் என்று தெரியவருகின்றது.
ஆவா குழு உறுப்பினர் என்ற சந்தேகத்தின் பேரில் அவர் கைது செய்யப்பட்டுள்ளார் என்று தெரிவிக்கப்படுகின்றது. கைது செய்யப்பட்டவர் 21 வயதுடையவர் என்றும் தெரிவிக்கப்படுகின்றது.
கைது செய்யப்பட்டவர் தற்போது யாழ்ப்பாணம் பொலிஸாரிடம் கையளிக்கப்பட்டுள்ளார் என்றும் தெரிவிக்கப்பட்டது.