அமெரிக்காவின் செயற்பாடுகளைப் பொறுத்தே தனது முடிவை அறிவிக்க போவதாக வடகொரிய ஜனாதிபதி கிங் யொங் உன் தெரிவித்துள்ளார்.
தனது இராணுவத்திடமிருந்து அமெரிக்காவின் குவாம் தீவை தாக்கும் திட்டம் பற்றிய அறிக்கையை பெற்ற வடகொரிய ஜனாதிபதி அந்நடவடிக்கை குறித்து முடிவெடுக்கும் முன் அமெரிக்காவின் செயல்பாடுகளை கொஞ்சம் பொறுத்திருந்து பார்க்கப் போவதாக கூறியுள்ளார்.
அணு ஆயுதங்களை நமக்கு அருகில் கொண்டு வந்த அமெரிக்கா முதலில் சரியான முடிவெடுத்து கொரிய தீபகற்பத்தில் பதற்றத்தை தணிக்கவும், அபாயகரமான இராணுவ மோதலைத் தடுத்தும் நடவடிக்கை எடுக்கிறதா என்பதை நமக்கு காட்டட்டும்’ என வடகொரிய ஜனாதிபதி கூறியதாக வட கொரிய அரசு ஊடகம் தெரிவித்துள்ளது.
இதுதவிர இராணுவமும் எப்போதும் செயல்பட தயாராக இருக்கும்படி ஆணை பிறப்பித்துள்ளதாகவும் கூறப்படுகிறது.