யாழ் .மல்லாகம் நீதிமன்றத்தின் அனுமதிக்கிணங்க மிரிஹான தடுப்புமுகாமில் தடுத்து வைக்கப்பட்டிருந்த மியன்மார் ரோகிஞ்சா முஸ்லிம் அகதிகளை ரத்மலானை பகுதிலுள்ள வீடொன்றில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
முகாம்களில் தடுத்து வைக்கப்பட்டுள்ள ரோகிஞ்சா முஸ்லிம்களை முகாமிற்கு வெளியில் வைத்து பாரமரிப்பதற்கு அனுமதி கோரி ஐக்கிய நாடுகள் சபை அகதிகளுக்கான உயர்ஸ்தானிகராலயம் குடிவரவு –குடியகல்வு திணைக்களத்தினால் மல்லாகம் மஜிஸ்திரேட் நீதிமன்றில் மனுத்தாக்கல் செய்திருந்தது.
அதைத் தெடர்ந்தே நீதிமன்றம் இலங்கையில் சட்டவிரோதக் குடியேற்றவாசிகள் தடுப்பு முகாமில் தடுத்து வைக்கப்பட்டுள்ள ரோகிஞ்சா முஸ்லிம்களை முகாமில் இருந்து விடுதலை செய்து முகாமிற்கு வெளியே வைத்து பராமரிக்க அனுமதியை வழங்கியது.
மல்லாகம் நீதிபதி அனுமதி வழங்கியதிற்கிணங்க, குறித்த 32 மியன்மார் ரோகிஞ்சா முஸ்லிம் அகதிகளும் இன்று ரத்மலானை பகுதியிலுள்ள வீடொன்றில் தங்க வைக்கப்பட்டுள்ளனர் என சிரேஷ்ட சட்டத்தரணி சிராஸ் நூர்தீன் தெரிவித்தார்.