Monday, August 25, 2025
Easy 24 News
Advertisement
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
Easy 24 News
No Result
View All Result
Home News

‘ஆவா’ குறித்த இரகசிய தகவல்கள் வெளியாகின

August 9, 2017
in News
0
‘ஆவா’ குறித்த இரகசிய தகவல்கள் வெளியாகின

வடக்கை அச்சுறுத்தி வந்த ஆவா எனும் பாதாள உலகக் குழுவின் தற்போதைய தலைவனான நிஷா விக்டர் உள்ளிட்ட ஆறு பேரை கைது செய்த பயங்கரவாத புலனாய்வுப் பிரிவின் (ரீ.ஐ.டி.) அவர்களை நேற்று மேலதிக விசாரணைகளுக்காக யாழ். பொலிஸாரிடம் கையளித்தனர்.

இதன்போது வாள், மோட்டார் சைக்கிள், கூரிய கத்தி, கைக்குண்டு பயன்படுத்தியமை மற்றும் வெளிநாட்டு தொடர்புகள், 2014 முதல் பல்வேறு குற்றச் செயல்களுடன் தொடர்புள்ளமை மற்றும் கடந்த ஆண்டும் குறித்த குழுவினர் பொலிஸாரை வெட்டியுள்ளமையும் போன்ற இரகசிய தகவல்கள் வெளிப்பட்டுள்ளன.

இந் நிலையில் வடக்கு பிராந்தியத்துக்கு பொறுப்பான சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் ரொஷான் பெர்ணான்டோவின் நேரடி மேற்பார்வையில் குறித்த அறுவரும் பயங்கரவாத தடை சட்டத்தின் கீழ் 72 மணி நேர தடுப்புய்க் காவலின் கீழ் எடுக்கப்ப்ட்டு விசாரணைக்கு உட்படுத்தப்ப்ட்டுள்ளனர்.

இதற்கான அனுமதியையும் நேற்றைய தினமே பொலிஸார் யாழ். நீதிவான் சதீஸ்கரனிடமிருந்து பெற்றுக்கொண்டுள்ளனர்.

இதனிடையே தடுப்புக் காவலில் உள்ள ஆறு சந்தேக நபர்களிடமும் , ஆவா குழுவின் பின்னணி, அதற்காக நிதிப் பங்களிப்பை வழங்குவோர் குறித்து விரிவாக விசாரணை செய்யப்படுவதாகவும், அக்குழுவின் நோக்கம் குறித்தும் இதன் போது விச்தேட அவதானம் செலுத்தப்பட்டுள்ளதாகவும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பொலிஸ் அத்தியட்சர் சட்டத்தரணி ருவன் குணசேகர தெரிவித்தார்.

சந்தேக நபர்களிடம் இருந்து 3 வாள்கள், ஒரு கூறிய கத்தி, வெளி நாட்டில் தயாரிக்கப்பட்ட கைக்குண்டு ஒன்று மற்றும் மோட்டார் சைக்கிளொன்று ஆகியனவும் மீட்கப்பட்டுள்ளதாக அவர் சுட்டிக்காட்டினார்.

அத்துடன் யாழ்ப்­பாணம் கொக்­குவில் பகு­தியில் முறைப்­பாடு ஒன்று தொடர்பில் விசா­ரணை செய்யச்சென்ற போது, இரு பொலிஸார் மீது நந்­தாவில் அம்மன் கோவில் அருகில் வைத்து வாள்வெட்டுத் தாக்­குதல் நடத்­தியதாக கூறப்படும் சம்பவம் தொடர்பில் இந்த 6 சந்தேக நபர்களுடன் சேர்த்து மொத்தமாக 11 சந்தேக நபர்கள் இதுவரை கைது செய்யப்பட்டுள்ள நிலையில் மொத்தமாக 14 சந்தேக நபர்கள் தாக்குதல் தொடர்பில் வருகைதந்துள்ளதாக விசாரணைகளில் உறுதியாகியுள்ளதாக பொலிஸ் அத்தியட்சர் ருவன் குணசேகர குறிப்பிட்டார்.

கடந்த 2016 நவம்பர் மாதம் ஆவா குழு தொடர்பில் சிறப்பு விசா­ர­ணை­களை முன்­னெ­டுக்கும் பயங்­க­ர­வாத புல­னாய்வுப் பிரிவின் சிறப்பு விசா­ரணைக் குழுவின் விசா­ரணை அதி­கா­ரி­யான உப பொலிஸ் பரி­சோ­தகர் புஷ்­ப­கு­மாரவின் விசாரணைகளில் வெளிப்படுத்தப்பட்ட பல தகவல்களையும் விசாரணையாளர்கள் மேலதிக விசாரணைத் தொடர்பில் பயன்படுத்தியுள்ளனர்.

அப்போதைய விசாரணைகளில் புலிகள் அமைப்பின் முன்னாள் உறுப்பினர்களே ஆவா குழுவின் பின்னணியில் இருப்பதும் அவர்கள் அரசாங்கத்தை அசௌகரியத்துக்கு உட்படுத்தும் விதமாகவே இவ்வாறான வாள்வெட்டுக்களை முன்னெடுப்பதும் தெரியவந்திருந்த தொலைபேசி வலையமைப்பு தகவல்கள், புலனாய்வுத் தகவல்கள் உள்ளிட்டவற்றை வைத்து தீவிர விசாரணைகள் இடம்பெற்றன.

இதன்போதே ஆவா குழுவின் உறுப்பினரும் பொலிஸார் மீது தாக்குதல் நடாத்தியவர் என அடையாளம் காணப்பட்டவருமான யாழ். கொக்குவில் கிழக்கு பகுதியைச் சேர்ந்த சிவசுப்ரமணியம் போல் என்பவரை மட்டக்குளியில் வைத்து பயங்கரவாத புலனாய்வுப் பிரிவினர் கைது செய்தனர்.

இவ்வாறு கைது செய்யப்பட்ட அவரை கோட்டையில் உள்ள பயங்கரவாத புலனாய்வுப் பிரிவின் சிறப்புக் குழு விசாரணைக்கு உட்படுத்தியது. இதன் போதே ஆவா குழுவை தற்போது வழி நடாத்தும் நிஷா விக்டர் என அறியப்படும் யாழ். திருநெல்வேலி பகுதியைச் சேர்ந்த சத்தியவேல் நாதன் நிஷாந்தன் என்பவர் தொடர்பில் தகவல்கள் வெளிப்படுத்தப்பட்டுள்ளது.

இதனையடுத்தே நேற்று முன்தினம் காலை வேளையில் அவர் இருக்கும் இடத்தை வெளிப்படுத்திக்கொண்ட பயங்கரவாத புலனயவுப் பிரிவினர் புறக்கோட்டை பஸ் நிலையத்தில் வைத்து அவரையும், அவருடன் இருந்த யாழ்ப்பாணத்தை சேர்ந்த வினோத் எனப்படும் ராஜ்குமார் ஜெயகுமாரையும், மனோஜ் எனப்படும் யாழ். கொக்குவில் கிழக்கை சேர்ந்த குலேந்திரன் மனோஜித்தையும் கைது செய்தனர்.

அத்துடன் யாழில் வைத்து, இணுவில் பகுதியைச் சேர்ந்த ஸ்ரீ காந்தன் குகநாத், கொக்குவில் பகுதியைச் சேர்ந்த அர்ஜுனன் பிரசன்னா ஆகியோரையும் கைது செய்தனர். கைது செய்யப்பட்ட மேற்படி அறுவரிடமும் பயங்கரவாத புலனாயவுப் பிரிவினர் நடாத்திய விசாரணைகளில் பல்வேறு தகவல்கள் வெளிப்படுத்தப்பட்டுள்ளன.

பயங்கரவாத புலனாய்வுப் பிரிவினர் முன்னெடுத்த விசாரணைகளில், தற்போது இயங்கும் ஆவா குழுவினை விக்டரே வழி நடாத்துவது உறுதியாகியுள்ளதுடன் அவர்களால் முன்னெடுக்கப்பட்ட சில குற்றச்செயல்கள் தொடர்பிலான தகவல்களும் வெளிப்படுத்தப்பட்டுள்ளன.

குறிப்பாக கடந்த 2014 ஆம் ஆண்டு சுன்னாகம் பொலிஸ் பிரிவில் இருவரை வாளால்வெட்டி காயப்படுத்தியமை, 2015 ஆம் ஆண்டு கோப்பாயில் வீடொன்றினை சேதப்படுத்தியமை தொடர்பில் இவர்களுக்கு தொடர்பிருப்பது விசாரணைகள் ஊடாக தெரியவந்துள்ளது.

அத்துடன் 2016 ஆம் ஆண்டு பொலிஸ் உளவுப் பிரிவினர் மீது வாள்வெட்டு தாக்குதல் நடாத்திய சம்பவம் தொடர்பிலும் விக்டர் உள்ளிட்டோருக்கு தொடர்பிருப்பது உறுதியாகியுள்ளது. அத்துடன் கடந்த ஆண்டு சுன்னாகம் பகுதியில் கடை ஒன்றிணையும் இவர்கள் சேதப்படுத்தியுள்ளதாக கூறும் பொலிஸார் இந்த ஆண்டு அரசடி பகுதியில் கடை ஒன்றின் மீது தாக்குதல் நடத்தியமை மற்றும் பல்கலைக்கழக மாணவன் ஒருவனை வாளால் வெட்டியமை தொடர்பிலும் இந்த குழுவுக்கு தொடர்பிருப்பதாக தெரிவிக்கின்றனர்.

கடந்த 2016 ஆம் ஆண்டு ஆவா குழுவை பயங்கரவாத புலனாய்வுப் பிரிவு கைது செய்த நிலையில் அதன் தலைவனாக செயற்பட்ட தமிழ் சினிமாவில் காட்டப்படுவதைப் போன்ற பாதாள உலகக் குழுக்களை வழி நடத்தி யாழ். மற்றும் அதனை அண்டிய பகுதிகளில் பொது மக்களை அச்சுறுத்தி பல்வேறு குற்றச் செயல்களில் ஈடுபட்டுவந்ததாக கூறப்படும் ஞானசேகரம் தேவசுதன் எனப்படும் தேவா, நல்லலிங்கம் பிரசன்னா எனப்படும் சன்ன மற்றும் டேனியல் குணசீலன் எனப்படும் பிரகாஷ் ஆகியோர் இந்தியாவுக்கு கடல்மார்க்கமாக தப்பிச் சென்றிருந்தனர். அவர்கள் கடந்த ஜூன் மாதம் இந்தியாவில் கைதும் செய்யப்பட்டிருந்தனர். இந் நிலையிலேயே வெற்றிடமான ஆவா குழு தலைமை பொறுப்பை விக்டர் ஏற்று வழி நடாத்தியுள்ளதாக அறியமுடிகின்றது.

முன்னதாக யாழ்ப்­பாணம் கொக்­குவில் பகு­தியில் முறைப்­பாடு ஒன்று தொடர்பில் விசா­ரணை செய்யச்சென்ற போது, இரு பொலிஸார் மீது நந்­தாவில் அம்மன் கோவில் அருகில் வைத்து வாள்வெட்டுத் தாக்­குதல் நடத்­திய குழுவின் முக்­கிய உறுப்­பி­னர்கள் எனக் கரு­தப்­படும் நல்லூர் சத்தியானந்தனா வீதியைச் சேர்ந்த 20 வயதுடைய மதூ எனப்படும் சிவராஷா மதுஷன் மற்றும் 23 வயதுடைய மானிப்பாய் பகுதியைச் சேர்ந்த விஜயரத்னம் சிவராஜ், 18 வய­து­டைய நல்லூர் வீதி, அர­ச­டியைச் சேர்ந்த நல்லூர் முத்து என அறி­யப்­படும் யோக­ராசா சதீ­சையும் கோப்பாய் மத்­தியைச் சேர்ந்த 18 வய­து­டைய அருள் சீலன் பெட்ரிக் தினே­ஸ், கொக்குவில் மேற்கை சேர்ந்த 18 வயதுடைய புஷ்பராசா டக்ஷன் ஆகியோரே இதுவரை கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். இவர்களில் ஐந்தாவது சந்தேக நபர் யாழ். பிராந்திய பயங்கரவாத புலனயவுப் பிரிவினராலும் ஏனையோர் சிறப்பு பொலிஸ் குழுவினராலும் கைது செய்யப்பட்டிருந்தனர். இந்நிலையில் தற்போது கைதாகியுள்ள 6 பேருடன் சேர்த்து மொத்தமாக 11 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் நேற்று விஷேட ஊடகவியலாளர் சந்திப்பை நடாத்தி பொலிஸ் ஊடகப்பேச்சாளர் பொலிஸ் அத்தியட்சர் ருவன் குணசேகர தகவல் தருகையில், இவ்வாறான குழுக்களை தழைக்கவிடப் போவதில்லை எனவும், அவர்களுக்கு எதிராக கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தெரிவித்தார்.

இந்நிலையில் சந்தேக நபர்கள் தொடர்பில் வடக்கு சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் ரொஷான் பெர்னாண்டோ, யாழ். பிரதிப் பொலிஸ் மா அதிபர் பாலித்த பெர்ணான்டோ ஆகியோரின் கட்டுப்பாட்டில் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சர் ஸ்ரெனிஸ்லெஸின் ஆலோசனைக்கு அமைய யாழ். தலைமையக பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி பிரதான பொலிஸ் பரிசோதகர் ஹேவாவித்தாரண தலைமையிலான சிறப்புக் குழு தடுப்பில் உள்ள அறுவரிடமும் விசாரணைகளை முன்னெடுத்துள்ளது.

Previous Post

அதிரடிப்படையால் கைதுசெய்யப்பட்டவர்களில் 18 பேர் மட்டும் விடுவிப்பு !!

Next Post

இன்று முதல் விசேட ரயில் சேவை

Next Post
இன்று முதல் விசேட ரயில் சேவை

இன்று முதல் விசேட ரயில் சேவை

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures