கிழக்கு சமூக அபிவிருத்தி மையத்தினால் தகவல் அறியும் சட்டம் தொடர்பான முழுநேர கருத்தரங்கொன்று நடத்தப்பட்டுள்ளது.
குறித்த கருத்தரங்கு இன்று மட்டக்களப்பு வாழைச்சேனை இந்துக்கல்லூரியின் பிரதான மண்டபத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
இதில் வாழைச்சேனை, வாகரை ஆகிய பிரதேச செயலாளர் பிரிவுகளில் இயங்கும் சனசமூக அமைப்புக்களின் அங்கத்தவர்கள் கலந்து கொண்டு தகவல் அறியும் சட்டம் தொடர்பான தகவல்களை பெற்றனர்.
கிழக்கு சமூக அபிவிருத்தி மையத்தின் தலைவர் எம்.ஆர்.புஹாரி தலைமையில் நடைபெற்ற இந்த கருத்தரங்கில், வளவாளராக சட்டத்தரணி கே.எல்.சாஜீத் கருத்துக்களை வழங்கியிருந்தார்.