Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

வட­ம­ராட்சி கிழக்­குச் சூடு தொடர்­பில் உப பொலிஸ் பரி­சோ­த­கர் வாக்­கு­மூ­லம்

August 5, 2017
in News
0
வட­ம­ராட்சி கிழக்­குச் சூடு தொடர்­பில் உப பொலிஸ் பரி­சோ­த­கர் வாக்­கு­மூ­லம்

ஹன்­ரரை நிறுத்­து­வ­தற்கு முயன்­றோம். பின்­னுக்கு இருந்த­­வர்­களை நோக்கி ஹன்­ரரை நிறுத்­து­மாறு கத்­தி­னேன். ஆனால் ஹன்­ரரை நிறுத்­த­வில்லை. உடனே முபா­ரக்கை நோக்கி ஹன்­ரரை நோக்கி வடி­வா­கப் பார்த்து ரயரை நோக்கி – கீழ் நோக்­கிச் சுடு­மாறு கூறி­னேன். அவர் ஒரு வெடியை ஹன்­ரரை நோக்­கிச் சுட்­டார்.

இவ்­வாறு வட­ம­ராட்சி கிழக்கு துப்­பாக்­கிச் சூட்­டுச் சம்­ப­வம் தொடர்­பில் கைது செய்­யப்­பட்­டுள்ள உப­பொ­லிஸ் பரி­சோ­த­கர் சஞ்­சீ­வன் வாக்­கு­மூ­லம் வழங்­கி­னார்.

யாழ். வட­ம­ராட்சி கிழக்­குப் பகு­தி­யில் துப்­பாக்­கிச் சூட்­டுச் சம்­ப­வத்­தில் இளை­ஞர் ஒரு­வர் உயி­ரி­ழந்­தமை தொடர்­பான வழக்கு நேற்று பருத்­தித்­துறை நீதி­மன்­றில் விசா­ர­ணைக்கு எடுத்­துக் கொள்­ளப்­பட்­டது.

சந்­தே­க­ந­பர்­க­ளில் ஒரு­வ­ரான உப பொலிஸ் பரி­சோ­த­கர் சஞ்­சீ­வன், உயி­ரி­ழந்­த­வ­ரின் தாய் மற்­றும் சகோ­தரி ஆகி­யோர் நீதி­மன்­றில் வாக்­கு­மூ­லம் வழங்­கி­னர்.

உப பொலிஸ் பரி­சோ­த­கர் வாக்­கு­மூ­லத்­தில் தெரி­வித்­த­தா­வது:-
வாக­ன­மொன்­றில் மண­லுக்­குள் புதைத்து கஞ்சா கடத்­தப்­ப­டு­கின்­றது என்று இர­க­சி­யத் தக­வல் கிடைத்­தது. பொலிஸ் நிலை­யத்­து­டன் தொடர்பு கொண்டு விட­யத்­தைத் தெரி­வித்­தேன். பொலிஸ் சீரு­டை­யு­டன் ஒரு பொலிஸ் உத்­தி­யோ­கத்­தரை வரு­மாறு கூறி­னேன். பொலிஸ் சீரு­டை­யு­டன் வந்த முபா­ரக் என்ற கொன்ஸ்டபிளை அழைத்­துக் கொண்டு வல்­லி­பு­ரக் கோயில் முதன்­மை வீதி­யூ­டாக நாகர்­கோ­யில்­வரை சென்­றோம்.’

முபா­ரக்­கின் கையில் ரி-56ரக துப்­பாக்கி கொண்­டு­வ­ரப்­பட்­டது. அங்கு சென்ற நாம் தக­வல் தொடர்­பி­லான சில கட­மைச் செயற்­பா­டு­களை மேற்­கொண்­டோம். பின்­னர் நாகர்­கோ­யில் – குடத்­தனை முதன்­மை வீதி­யூ­டா­கச் சென்று வீதி­யோ­ர­மாக மோட்­டார் சைக்­கிளை நிறுத்தி நானும், முபா­ரக்­கும் மோட்­டார் சைக்­கி­ளில் இருந்து இறங்கி நின்­றோம்.

அப்­போது நீல நிறத்­தி­லான ஹன்­ரர் ஒன்று வந்­தது. அதன் முன்­பக்­கத்­தில் மூன்று பேரும், பின்­பக்­கத்­தில் நான்கு பேரும் இருந்­த­னர். வீதி­யின் மத்­திக்கு வந்து கையைக் காட்டி வாக­னத்தை நிறுத்­து­மாறு சைகை காட்­டி­னேன். ஹன்­ரர் என்னை இடிப்­பது போல் வந்­தது. நான் வீதி­யோ­ர­மா­கப் பாய்ந்­தேன். ஏன் நிறுத்­தா­மல் செல்­கி­றார்­கள் என்று கேட்­டுக் கொண்டு மோட்­டார் சைக்­கிளை ஸ்ராட் செய்து ஹன்­ர­ரைத் துரத்­தி­னோம்.

ஹன்­ரரை நிறுத்­து­வ­தற்கு முயன்­றோம். பின்­னுக்கு இருந்த­வர்­களை நோக்கி ஹன்­ரரை நிறுத்­து­மாறு கத்­தி­னேன். ஆனால் ஹன்­ரரை நிறுத்­த­வில்லை. மோட்­டார் சைக்­கி­ளின் வேகத்­தைக் கூட்டி ஹன்­ர­ருக்கு அரு­கில் 750 மீற்­றர் அண்­மை­யா­கச் சென்று ஹன்­ரரை நிறுத்­து­மாறு கூறி­னேன். நான் நெருங்­கிய சம­யம் ஹன்­ரர் மண் பாதை ஒன்­றுக்­குள் சடு­தி­யா­கத் திரும்­பி­யது. உடனே முபா­ரக்கை
நோக்கி ஹன்­ரரை நோக்கி வடி­வா­கப் பார்த்து ரயரை நோக்கி, கீழ் நோக்­கிச் சுடு­மாறு கூறி­னேன். அவர் ஒரு வெடியை ஹன்­ரரை நோக்­கிச் சுட்­டார்.

ஹன்­ரர் நிறுத்­தப்­பட்டு அதில் இருந்­த­வர்­கள் குதித்­துப் பற்­றைக்­குள் ஓடி­னர். மோட்­டார் சைக்­கிளை நிறுத்­தி­னோம். முபா­ரக் அவர்­க­ளைச் துரத்­திச் சென்­றார். நான் ஹன்­ர­ரில் திறப்பு இருக்­கின்­றதா என்று பார்ப்­ப­தற்­காக ஆச­னப் பக்­கம் சென்­றேன். அப்­போ­து­தான் ஹன்­ர­ருக்­குக் கீழ் ஒரு­வர் காயத்­து­டன் விழுந்து கிடந்­தார்.

முபா­ரக்கை கூட்­பி­ட்ட நான் காயப்­பட்டு விழுந்து கிடந்த அவ­ரைத் தூக்கி எமது மோட்­டார் சைக்­கி­ளில் ஏற்றி நான் மோட்­டார் சைக்­கி­ளைச் செலுத்த அவரை எனக்­கும் முபா­ரக்­குக்­கும் இடை­யில் வைத்து அம்­பன் வைத்­திய­சா­லைக்­குக் கொண்டு சென்­றோம். அங்கு அம்­பு­லன்­ஸில் ஏற்­றி­னார்­கள். எங்­க­ளில் ஒரு­வரை வரு­மாறு கேட்­ட­னர்.

முபா­ரக்கை அம்­பு­லன்­ஸில் செல்­லு­மாறு கூறி­ய­து­டன் அவ­ரி­டம் இருந்து ரி-56 ரக துப்­பாக்­கியை நான் வாங்­கிக் கொண்­டேன். பின்­னர் பொலிஸ் நிலையத் தொலை­பேசி இலக்­கத்­து­டன் தொடர்பு கொண்டு தக­வல் வழங்­கி­னேன். அதி­காரி என்னைப் பொலிஸ் நிலை­யம் வரு­மா­றும், பொலிஸ் குழுவை அனுப்­பு­கின்­றேன் என்­றும் கூறி­னார் –- என்­றார்.

உயி­ரி­ழந்­த­வ­ரின் தாய் வாக்­கு­மூ­ல­ம­ளித்­தார். வேலை முடிந்து வீடு திரும்­பிக்­கொண்­டிருந்­தேன். அப்­பொ­ழுது வழி­யில் என்­னைக் கண்ட சிலர், எனது மகன் இறந்து விட்­டான் என்று தெரி­வித்­த­னர். அதன் பின் மருத்­து­வ­மனை சென்று உயி­ரி­ழந்த என்­னு­டைய மக­னைப் பார்த்­தேன் – என்று அவர் தெரி­வித்­தார்.

உயி­ரி­ழந்­த­வ­ரின் சகோ­தரி வாக்­கு­மூ­லத்­தில் தெரி­வித்­த­தா­வது-:
எனது சகோ­த­ர­னி­டம் மதி­யம் 2.30 மணி­ய­ள­வில் சாப்­பி­டக் கேட்­டேன். அப்­போது எனது தம்பி காளி கோவி­லுக்­குப் போய் வந்து சாப்­பி­டு­வ­தா­கக் கூறிச் சென்றுவிட்­டார்.

அதன் பின்­னர் மாலை 4.30 மணி­ய­ள­வில் எனது சகோ­த­ரன் விபத்­தொன்­றில் இறந்து விட்­டார் என்று அய­ல­வர்­கள் மூலம் அறிந்து கொண்­டேன். நான் மருத்­து­வ­மனை சென்று பார்த்­த­போ­து­தான் எனது சகோ­த­ரன் மார்­பில் குண்டு பட்டு இறந்­ததை அறிந்து கொண்­டேன் – என்­றார்.

விசா­ர­ணை­க­ளை­ய­டுத்து எதிர்­வ­ரும் 15 ஆம் திக­தி­வரை சந்தே­க நபர்­களை விளக்­க­ம­றி­ய­லில் வைக்­கு­மாறு நீதி­வான் நளினி சுபாஸ்­க­ரன் உத்­த­ர­விட்­டார்.

சம்­பவ தின­மன்று ஹன்­ரர் வாக­னத்­தில் பய­ணம் செய்த ஏனைய நால்­வ­ரின் விவ­ரங் க­ளை­யும் நீதி­மன்­றில் ஒப்­ப­டைக்க வேண்­டும் என்­றும் பொலி­ஸா­ருக்கு நீதி­வான் உத்­த­ர­விட்­டார். வழக்கை முன்­னிட்டு நீதி­மன்­றில் பாது­காப்­புப் பலப்­ப­டுத்­தப்­பட்­டி­ருந்­தது.

Previous Post

வவு. வர்த்­தக நிலையங்­க­ளில் நேற்­றுத் திடீர்ச் சோதனை

Next Post

பிரதமரை வாழ்த்த கூட்டு எதிர்க் கட்சி, ஜே.வி.பி. மறுப்பு

Next Post
சிறிலங்கா நாடாளுமன்றத்தில் முதல் முறையாக இலத்திரனியல் முறையில் வாக்கெடுப்பு

பிரதமரை வாழ்த்த கூட்டு எதிர்க் கட்சி, ஜே.வி.பி. மறுப்பு

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • Trending
  • Comments
  • Latest
வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

May 20, 2022
ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

March 8, 2023
கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

June 6, 2023
ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

July 28, 2023
இராணுவ ஆட்சியின் பக்கம் நாடு பயணிப்பதை தடுக்க வேண்டும் – அநுரகுமார

மக்களின் எதிர்ப்பை தாக்குப்பிடிக்க முடியாத ‘கோட்டா ‘பதுங்கு குழியில் | அனுரகுமார

50,000 டொலர்களுக்கு மேலாக சரவணபவன் என்ற உணவகத்தின் சார்பாக அதன் தலைவர் மாண்புமிகு திரு கணேஷன் சுகுமார் அவர்கள் வைத்தியசாலை அதிகாரிகளிடம் அந்த நிதி உதவியினை வழங்கியிருப்பதனையும் இவ்வாறான நிதி அன்பளிப்பு செய்யும் நடவடிக்கை தொடர்ந்து சரவணபவன் என்ற உணவகத்தினால் மேற்கொள்ளப்பட்டு வருவது பாராட்டுதல்களுக்குரியதாகும்.

கனடாவில் மட்டுமன்றி உலகளாவியரீதியில் பல கிளை நிறுவனங்களை கொண்ட Skymoon Travels and Tours என்ற நிறுவனத்தின் உரிமையாளரும் பிரபல தொழில் அதிபருமான Andrew அவர்களின் அதீத ஆசையின் பிரகாரமே LUCID NIGHTSஇசைக்குழு என்ற ஆரம்பிக்கப்பட்டது.

கொவிட் வைரஸின் புதிய பிறழ்வு ‘நியோகோவ்’ குறித்து வுஹான் விஞ்ஞானிகள் எச்சரிக்கை

கொரோனா தொற்று பாதிப்புக்கு பிறகு அதிகரிக்கும் சர்க்கரை நோய், ஞாபக மறதி, சுவாச பிரச்சினைகள் | அப்போலோ மருத்துவர்கள்

தொடர்ந்து அறிமுக இயக்குநர்களுடன் கரம் கோர்க்கும் ‘சிறை’ எல்.கே. அக்ஷய் குமார்

தொடர்ந்து அறிமுக இயக்குநர்களுடன் கரம் கோர்க்கும் ‘சிறை’ எல்.கே. அக்ஷய் குமார்

September 23, 2026
குத்துசண்டையில் யஸ்மின், ரவிந்து, ஸ்கொஷ்ஷில் லக்சிறி, சினாலி, மேசைப்பந்தாட்டத்தில் சுவர்ணா ஆகியோர் வெற்றி

குத்துசண்டையில் யஸ்மின், ரவிந்து, ஸ்கொஷ்ஷில் லக்சிறி, சினாலி, மேசைப்பந்தாட்டத்தில் சுவர்ணா ஆகியோர் வெற்றி

September 23, 2026
அனோஜனின் விடுதலைக்கான முயற்சி: இந்திய, அமெரிக்க தூதரக அதிகாரிகளுடன் தமிழரசுக் கட்சி சந்திப்பு

அனோஜனின் விடுதலைக்கான முயற்சி: இந்திய, அமெரிக்க தூதரக அதிகாரிகளுடன் தமிழரசுக் கட்சி சந்திப்பு

September 23, 2026
தலைமன்னாரில் இருந்து ராமர் பாலத்துடன் தொடர்புடைய 8 மணல் திட்டுகளை மக்கள் பார்வையிடுவதற்கான படகு சேவையை ஆரம்பிக்க நடவடிக்கை

தலைமன்னாரில் இருந்து ராமர் பாலத்துடன் தொடர்புடைய 8 மணல் திட்டுகளை மக்கள் பார்வையிடுவதற்கான படகு சேவையை ஆரம்பிக்க நடவடிக்கை

September 23, 2026

Recent News

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures