மத்துகம கல்வி வலயத்தில் தரம்1 முதல் 9 வரை யான வகுப்புகளுடன் இயங்கிவரும் தமிழ்ப் பாடசாலையொன்றில் மாணவிகள் பாலியல் துஷ்பிரயோகம் செய்யப்பட்டதாக பாடசாலை அதிபருக்கெதிராக பெற்றோர் வலயக் கல்விக் காரியாலயத்தில் புகார்செய்துள்ளனர். கடந்த பத்து வருடங்களுக்கு மேலாக கடமை நிறைவேற்றும் அதிபராக இருந்துவரும் இவர், கடந்த சில வருடங்களாகவே மாணவிகளை இவ்வாறு துஷ்பிரயோகம் செய்யும் நடவடிக் கையில் தொடர்ச்சியாக ஈடுபட்டு வந்துள்ளதாக பெற்றோர் தெரிவித்துள்ளனர்.
மாணவிகளை கதிரையில் ஏறி நின்று விளக் கேற்றுமாறு கூறி அவர்கள் அவ்வாறு ஏறிநின்று விளக்கேற்றும் போதும், அலுவலகத்துக்கு வர வழைத்து பாடங்களை கற்பிப்பது போன்றும், வெந்நீர் கொதிக்கவைக்குமாறு கூறி வெந்நீர் கொதிக்கவைக்கும்போதும் மாணவிகளின் அவ பவங்களைத்தொட்டும் பாலியல் சேட்டைகளை மேற்கொண்டு வந்துள்ளார். இவரது இந்த நடவடிக்கை பெற்றோருக்கு தெரிந்திருந்த போதிலும் பிள்ளைகள் பாதிப்புக் குள்ளாகும் நிலை ஏற்படும் என்பதால் மெளன மாகவே இருந்து வந்துள்ளனர்.
அத்துடன் இங்கு கடமையிலிருந்துவரும் சில ஆசிரியர்களுக்கும் இவரது இந்த நடவடிக்கைகுறித்து தெரிந்திருந்த போதிலும் அவர்களும் இதை மூடிமறைத்து வந்துள்ளதாகவும் பாதிப்புக்குள்ளா மாணவிகள் பெற்றோரிடம் புகார்செய்ய விடாது தடுத்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
அண்மையில் தரம் 9 இல் கல்விகற்கும் மானவியொருவர் தமது பெற்றோரிடம் புகார் செய் ததையடுத்து இந்தச் சம்பவம் வெளிச்சத்துக்கு வந்து வலயக் காரியாலயத்தில் புகார் செய்யப் பட்டுள்ளது.
மாணவர்களுக்கு வழிகாட்டியாக இருந்து அவர்களை நல்வழிப்படுத்திசமூகத்தில் நற்பிரஜைகளை உருவாக்கவேண்டிய பொறுப்பு வாய்ந்த பதவியில் இருந்து கொண்டு இவ்வாறு நடந்து கொண்ட இவரது நடவடிக்கையை முடி வுக்கு கொண்டுவந்து இவரை இடமாற்றம் செய் யவேண்டும் என தீர்மானித்த சில பெற்றோர் இது தொடர்பாக வலயக் கல்விகாரியாலயத்தில் புகார்செய்துள்ளனர்.
இதையடுத்தே அதிகாரிகள் குறித்த பாடசாலைக்குச்சென்று விசாரணை மேற் கொண்டு வருகின்றனர். இது தொடர்பாக வலயக் கல்விக்காரியாலயப் பணிப்பாளருடன் தொடர்பு கொண்டு கேட்ட போது, குறித்த அதிபர், மாணவர் மற்றும் பெற் றோரிடம் விரிவான விசாரணை மேற்கொள்ளப் பட்டு வருவதாகத் தெரிவித்துள்ளார்.
இந்த அதிபர் ஏற்கனவே இங்கு கடமையிலிருந்த இரு ஆசிரியைகளிடமும் இவ்வாறு நடந்துகொண்டமையால்அவ்விருவரும் இவருக்கு தகுந்த பாடம் புகட்டிவிட்டு இடமாற்றம் பெற்றுச்சென்றுவிட் டனர். அத்துடன் தரம் 9 மாணவி ஒருவரிடமும் பாலியல் சேட்டை புரிந்ததன் காரணமாக மானவியின் தாயாரினால் பாடம் புகட்டப்பட்டவர் என பெற்றோர் தெரிவித்துள்ளனர்.