வடக்கு மாகாண சபையின் குற்றச்சாட்டுக்களிற்குள்ளான எஞ்சிய இரு அமைச்சர்களையும் பதவி நீக்குவதில் முதலமைச்சர் தொடர்ந்தும் குறியாகவே இருந்துவருகின்றார்.அவ்வகையினில் போக்குவரத்து அமைச்சர் பா.டெனீஸ்வரனை, தமிழீழ விடுதலை இயக்கம் (ரெலோ) கோரிக்கைக்கு அமையப் பதவி நீக்கம் செய்ய அவர் முடிவு செய்துள்ளார்.
கடந்த 13ஆம் திகதி, தமிழீழ விடுதலை இயக்கத்தின் செயலாளர் ந.சிறீகாந்தாவால் வடக்கு மாகாண முதலமைச்சருக்கு அனுப்பப்பட்ட கடிதத்தினில் வடக்கு மாகாண சபையில் தங்கள் தலைமையில் அமைந்துள்ள அமைச்சரவையில் தொடர்ந்தும் அங்கம் வகிப்பதற்கான சகல தகுதிகளையும் பா.டெனீஸ்வரன் இழந்துள்ளார் என கட்சி தீர்மானித்துள்ளது.
பா.டெனீஸ்வரனை அமைச்சரவையில் இருந்து நீக்க உரிய நடவடிக்கை எடுக்குமாறும் அவருக்குப்பதிலாக எமது கட்சியினால் பரிந்துரைக்கப்படும் வடக்கு மாகாண சபை உறுப்பினரை அமைச்சராக நியமிக்க கோரப்பட்டிருந்தது.
இந்நிலையினில் பா.டெனீஸ்வரனும் அமைச்சு பதவியிலிருந்து தூக்கப்பட்டால் சத்தியலிங்கம் தனித்து போவார் என தமிழரசுக்கட்சி அஞ்சுகின்றது.இதனால் தொடர்ந்தும் முதலமைச்சருக்கு குடைச்சலிiனை கொடுத்து பா.டெனீஸ்வரனை காப்பாற்ற பிரச்சாரங்கள் முடுக்கிவிடப்பட்டுள்ளது.
எனினும் அடுத்த மாகாணசபை அமர்வின் முன்னதாக பா.டெனீஸ்வரன் அமைச்சு பதவியிலிருந்து தூக்கியெறியப்படுவது உறுதியென உள்ளக தகவல்கள் தெரிவிக்கின்றன.