மிளகு கொள்வனவிற்கு அடுத்த இரண்டு வாரங்களில் நிலையான கட்டுப்பாட்டு விலையை நிர்ணயிப்பதற்கு நடவடிக்கை எடுப்பதாக ஆரம்பக் கைத்தொழில் அமைச்சர் தயா கமகே அறிவித்துள்ளார்.
அமைச்சரவையின் அனுமதியைப் பெற்றுக் கொண்டு அதற்குத் தேவையான நிதியை நிதியமைச்சின் ஊடாக ஒதுக்கிக் கொள்வதற்கு நடவடிக்கை எடுப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.
மிளகு விலை வீழ்ச்சியடைந்துள்ளதாக மிளகு உற்பத்தியாளர்கள் தெரிவித்துள்ள கருத்துக் குறித்து அவர் பதிலளிக்கையில் இதனைக் கூறியுள்ளார்.