தேசிய நாள் நிகழ்வுக்கான சிறப்பு விருந்தினராக, அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் இன்று காலை ஓர்லி விமானநிலையதத்தில் வந்திறங்கினார். 24 மணிநேரங்கள் பிரான்சில் இவர் தங்க உள்ளார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இன்று வியாழக்கிழமை நிகழ்வுகளாக டொனால்ட் ட்ரம்ப், நெப்போலியன் கல்லறையைச் சென்று பார்வையிடுகிறார். தவிர இன்று இரவு ஈஃபிள் கோபுரத்தின் இரண்டாவது தளத்தில் இடம்பெற உள்ள சிறப்பு இரவு உணவு விருந்தில் கலந்துகொள்ள இருக்கிறார். இந்த விருந்தில் ஜனாதிபதி மக்ரோன் மற்றும், டொனால்ட் ட்ரம்ப், அவரின் மனைவி Melania Trump ஆகியோர்கள் கலந்துகொள்கிறார்கள்.
தவிர, நாளை ஜூலை 14 தேசிய தின நிகழ்வு சோம்ப்ஸ் எலிசேயில் இடம்பெறும் போது, டொனால்ட் ட்ரம்ப் இதை நேரடியாக பார்வையிடுவார் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.