யாழ்ப்பாணத்தில் இருந்து அக்கரைப்பற்றுக்கு கஞ்சா போதைப்பொருள் கடத்த முற்பட்ட ஒருவர் வவுனியா மத்திய பேருந்து நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.
கிளிநொச்சியை சேர்ந்த நபர் ஒருவரே இவ்வாறு நேற்று மாலை கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கைது செய்யப்பட்ட சந்தேகநபரிடம் இருந்து 4 கிலோ 300 கிராம் கஞ்சா போதைப்பொருள் கைப்பற்றப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
யாழ்ப்பாணத்தில் இருந்து அக்கரைப்பற்றுக்கு பயணித்த குறித்த நபரின் பயணப்பொதியை வவுனியா மத்திய பேருந்து நிலையத்தில் வைத்து சோதனை செய்த போது சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
இந்நிலையில், சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.