Monday, August 25, 2025
Easy 24 News
Advertisement
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
Easy 24 News
No Result
View All Result
Home News

பொலித்தீன் பைகள், பிளாஸ்டிக் கோப்பைகள் மற்றும் உணவு பொதியிடல் பெட்டிகளுக்கு தடை!

July 13, 2017
in News
0

பொலித்தீன் பைகள், பிளாஸ்டிக் கோப்பைகள் மற்றும் ரெஜிபோமிலான உணவு பொதி செய்யும் பெட்டிகள் உள்ளிட்டவற்றின் பாவனைக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
மெல்லிய பொலித்தீன் பாவனையை தடைசெய்வது தொடர்பில் சுற்றாடல் துறை அமைச்சும், மத்திய சுற்றாடல் அதிகார சபையும் சமர்ப்பித்த ஆவணத்திற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. இதன்மூலம் மேற்கொள்ளக்கூடிய நடைமுறைகள் தொடர்பான விடயங்கள் அமைச்சரவை ஆவணத்தில் உள்ளடக்கப்பட்டுள்ளது.

பொலித்தீன் தடை தொடர்பிலான அமைச்சரவை ஆவணத்தில் குறிப்பிடப்பட்டுள்ள விடயங்கள் வருமாறு,

*தேசிய, மத, சமூக கலாச்சாரம் மற்றும் அரசியல் வைபவங்கள் உள்ளிட்ட அனைத்து நிகழ்வுகளின் போது அலங்கார நடவடிக்கைகளுக்கு பொலித்தீன்களை பயன்படுத்துவது தடைசெய்யப்பட்டுள்ளது.

*மைக்றோன் 20க்கு (Microns 20 ) சமமான அல்லது அதற்கும் குறைந்த மொத்தமான பொலித்தீனை பயன்படுத்துதல் விற்பனை செய்தல் தயாரித்தல் ஆகியவற்றை தடைசெய்து தற்பொழுது விதிக்கப்பட்டுள்ள சட்டவிதிகள் உரியமுறையில் நடைமுறைப்படுத்துதல்.

*அத்தியாவசிய பணிகளுக்காக மைக்றோன் 20க்கும் குறைந்த பொலித்தீன் பாவனையை மத்திய சுற்றாடல் அதிகார சபையின் அனுமதியுடன் மாத்திரம் பாவிப்பதற்கு அனுமதிக்கப்பட்டுள்ளது.

*பிளாஸ்டிக் மூலப்பொருட்களாக பயன்படுத்தி தயாரிக்கப்படும் உணவுப்பொருட்களை பொதிசெய்வதற்கான பெட்டி, பிளாஸ்டிக் பீங்காண் கோப்பைகள் உள்ளிட்டவையும், கரண்டி உள்ளிட்டவற்றையும் இறக்குமதி செய்தல் தயாரித்தல் விற்பனை செய்தல் ஆகியனவற்றை தடைசெய்தல்.

*பொலித்தீனால் தயாரிக்கப்பட்ட பைகளை கொண்டு பொதியிடப்பட்ட உணவுப்பொருட்களின் விற்பனையை தடைசெய்தல்.

*பொருட்களை கொள்வனவு செய்யும் சந்தர்ப்பத்தில் பாவனையாளர்களுக்கு வழங்கப்படும் பொலிதீனால் பொதியிடுவதற்கு பதிலாக மாற்று நடவடிக்கையாக கடதாசி றோகுளோத் போன்ற சுற்றாடலுக்கு பொருத்தமான பொதியிடல் மற்றும் பைகளை வழங்குவதற்கும் இவ்வாறான பொதியிடல் தயாரிப்புக்களை மேற்கொள்ளும் போது உயிரியல் சீரழிவு இல்லாமல் இருக்கும் வகையில் உக்கிப்போகக்கூடிய பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்த ஊக்குவித்தல்.

*பகிரங்க இடங்களில் பிளாஸ்ரிக் பொருட்களை எரித்தலை தடைசெய்தல். உயிரியல் ரீதியில் அழியக்கூடிய பிளாஸ்ரிக் மூலப்பொருட்களை அறிமுகப்படுத்தல் மற்றும் பிரபல்யப்படுத்துதல்.

*உயிரில் ரீதியில் அழியக்கூடிய பிளாஸ்ரிக் மூலப்பொருட்களை பயன்டுத்தி தயாரிப்புக்களை மேற்கொள்வதற்காக தேவையான இயந்திரங்களை இறக்குமதி செய்யும் போது அவற்றிற்கு வரி நிவாரணத்தை வழங்குதல் மற்றும் பிளாஸ்ரிக் பொருட்களை இறக்குமதி செய்யும் போது 15 சதவீமதம் செஸ் [Cess] வரியை அறவிடுதல்.

*மீள் சுழற்சி செய்யப்படும் பிளாஸ்ரிக் மூலப்பொருட்கள் இறக்குமதியை முற்றாக தடைசெய்தல்.

Previous Post

த.தே.கூ.விற்கு புலிகளின் பங்களிப்பு இருந்தது: இரா.சம்பந்தன்

Next Post

வடமராட்சி கடலேரியைப் பயன்படுத்தி யாழ். குடாநாட்டிற்கு குடிநீரைப் பெற்றுக்கொள்ள திட்டம்!

Next Post
வடமராட்சி கடலேரியைப் பயன்படுத்தி யாழ். குடாநாட்டிற்கு குடிநீரைப் பெற்றுக்கொள்ள திட்டம்!

வடமராட்சி கடலேரியைப் பயன்படுத்தி யாழ். குடாநாட்டிற்கு குடிநீரைப் பெற்றுக்கொள்ள திட்டம்!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures