சென்னை சில்க்ஸ் தீ விபத்து சம்பவத்தை தொடர்ந்து புரசைவாக்கம் சிட்டி மால் வணிக வளாகத்தில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது.
உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்த தீயணைப்பு வீரர்கள் தீயை அணைத்து வரும் நிலையில், 7 தீயணைப்பு வாகனங்கள் விரைந்துள்ளன.
தீ விபத்துக்கு உள்ளான வணிக வளாகத்தில் 40க்கும் மேற்பட்ட கடைகள் இருப்பதாகவும், துணிக்கடைகளே அதிகம் எனவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
நான்கு மாடி கொண்ட கட்டிடத்தில், ஏழு கடைகள் முற்றிலுமாக சேதமடைந்து விட்டதாகவும், பாரிய அளவில் தீ விபத்தை தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
முதற்கட்ட தகவலின்படி பொதுமக்கள் யாருக்கும் பாதிப்பு ஏற்படவில்லை என கூறப்பட்டுள்ளது. சம்பவ இடத்துக்கு விரைந்த காவல்துறையினர் விசாரணையை முடுக்கிவிட்டுள்ளனர்.