முல்லைத்தீவு பாதுகாப்பு படைகளின் தலைமையக முகாமை ஊடறுத்து நந்திக்கடல் வரை புதிய வீதியை நிர்மாணிக்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது.
இந்த வீதி நிர்மாணிக்கப்படுவதன் காரணமாக பாதுகாப்பு படைகளின் தலைமையக முகாம் இரண்டு பகுதிகளாக பிரியும்.
ஏற்கனவே முகாம் அமைந்துள்ள பகுதியில் வீதியின் பகுதி ஒன்று நிர்மாணிக்கப்பட்டு செப்பனிடப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
நந்திக்கடல் செல்ல முல்லைத்தீவு நகரில் இருந்தும் ஒட்டு சுட்டான் பிரதேசத்தில் இருந்தும் இரண்டு நவீன வீதிகள் ஏற்கனவே நிர்மாணிக்கப்பட்டுள்ளன.
இந்த நிலையில், மிகவும் ஆரம்ப மட்டத்தில் இருக்கும் சிறிய வீதி விரிவுப்படுத்தப்பட்டு புதிய வீதி நிர்மாணிக்கப்பட்டு வருகிறது.
புதிய வீதி நிர்மாணிக்கப்பட்ட பின்னர், இரண்டாக பிரியும் முகாமின் ஒரு பகுதியை பொதுமக்களுக்கு பகிர்ந்தளிக்க திட்டமிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.