விதார்த், ரவீனா நடிப்பில் சுரேஷ் சங்கயா இயக்கத்தில் நேற்று உலகம் முழுவதும் திரைக்கு வந்த படம் ஒரு கிடாயின் கருணை மனு. இப்படம் அமெரிக்காவில் நடந்த திரைப்பட விழாக்களில் கலந்துக்கொண்டு பலராலும் பாராட்டப்பட்டது.
வட இந்தியர்கள் பலருமே நம் கலாச்சாரம் குறித்து ஆச்சரியமாக பார்த்தார்களாம், மண்ணின் மனம் மாறாமல் வெளிவந்துள்ள இப்படத்திற்கு விமர்சகர்கள் மத்தியிலும் பாராட்டுக்கள் குவிந்து வருகின்றது.
உலகத்தரம் என்பது வெறும் ஸ்பைடர் மேன், சூப்பர் மேன் படங்களில் இல்லை, அவரவர் ஊர்களின் கலாச்சாரத்தை வெளிப்படுத்தும் ஒரு படமே உலகப்படம்.
அப்படி நம் ஊர் மக்களின் வாழ்க்கை முறையை இத்தனை அழகாக வெளிக்காட்டியுள்ள ஒரு கிடாயின் கருணை மனுவை நாம் தானே கொண்டாட வேண்டும்.
இப்படி ஒரு நல்ல படத்தை நாம் ஆதரிக்கவில்லை என்றால், தமிழ் சினிமா மசாலா, கமர்ஷியல் பிடியில் மாட்டிக்கொண்டது, தரமான படங்கள் வரவில்லை என்று நாம் சொல்வதற்கும் உரிமை இல்லை.