சூப்பர்ஸ்டார் ரஜினியுடன் முள்ளும் மலரும், போக்கிரி ராஜா, ஜானி போன்ற படங்களில் நடித்த காமெடியன் சாமிக்கண்ணு நேற்று காலமானார். அவருக்கு வயது 95. அவர் கமலுடன் சகலகலா வல்லவன் படத்திலும் நடித்திருந்தார்.
அவருக்கு இரண்டு மகன்கள் மற்றும் இரண்டு மகள்கள் உள்ளனர். சாமிக்கண்ணுவின் இறுதி சடங்கு சென்னை பள்ளிக்கரனையில் உள்ள அவரது வீட்டில் நடக்கவுள்ளது.
தனது எட்டு வயதிலிருந்து மேடைநாடக கம்பெனிகளில் பனியாற்றி அவர் 1954 ல் புதுயுகம் என்ற திரைப்படத்தில் அறிமுகமானார். இதுவரை 400 படங்களுக்கு மேல் நடித்துள்ளார் அவர்.
ஜானி, முள்ளும் மலரும், போக்கிரிராஜா, சிவா, சகலகலாவல்லவன், வண்டிசக்கரம், உதிரிப்பூக்கள், என்ராசாவின்மனசிலே, பட்டிக்காடாபட்டணமா, பாட்டும்பரதமும், நான்அன்னக்கிளி, உரிமைக்குரல், மகாபிரபு போன்ற படங்கள் அவரின் திரைபயணத்தில் முக்கிய படங்களாகும்.