தமிழகத்தின் சேலம் மாவட்டம், அம்மாப்பேட்டையைச் சேர்ந்தவர் பார்த்திபன். இவருக்கு நேத்ரா என்ற மகள் உள்ளார். தற்போது மூன்றரை வயதாகும் நேத்ரா, நான்கு முதல் ஆறு வயதுக்குட்பட்டோருக்கான போட்டியில், 500 மீற்றர் மற்றும் 1000 மீற்றர் பிரிவுகளில் இரண்டு தங்கப்பதக்கங்களை வென்றுள்ளார்.
இந்நிலையில் நேத்ரா குறித்து அவரது தந்தை கூறுகையில், வீட்டில் ஒரு நிமிடம் கூட சும்மா இருக்க மாட்டாள். ஏதாவது ஒண்ணு செய்து கொண்டே இருப்பாள்.
இதனால் அவளை ஸ்கேட்டிங் பழகுவதற்கு சேர்த்துவிட்டேன். ஆரம்பத்தில் அதன் மேல் ஆர்வம் இல்லாமல் இருந்தாள். அதன் பின் அவளே முதல் ஆளாக ஸ்கேட்டிங் செல்வதற்கு கிளம்பி நிற்பாள் என்று கூறினார்.
நேத்ராவின் பயிற்சியாளர் கூறுகையில், இரண்டரை வயதிலேயே தனது கால்களில் சக்கரத்தை மாட்டிக்கொண்ட நேத்ரா, தாய்லாந்து வரை சென்று சர்வதேச ஸ்கேட்டிங் போட்டியில் தங்கம் வென்றுள்ளார்.
வயதில் மூத்தவர்களுடன் போட்டியிட்டு சாதனைப் படைத்த நேத்ரா, வருங்காலத்தில் பல்வேறு உலக சாதனை படைப்பார் என்ற நம்பிக்கை உள்ளது.
மேலும் நடிகர் விஜயின் தீவிர ரசிகை நேத்ரா. கோவாவில் நடந்த போட்டியின்போது தான் பெற்ற பதக்கத்துடன் அவரை நேரில் சந்தித்து வாழ்த்துப் பெற்றார்.
தாய்லாந்து போட்டியில் வெற்றிபெறவும் விஜய் சார் வாழ்த்து தெரிவித்ததாகவும், நடிகர் விஜய் என்றால் நேத்ராவுக்கு அவ்வளோ பிடிக்கும். வீட்டிலும் நடிகர் விஜய் மாதிரி நடித்து காட்டுவாள் என்று கூறியுள்ளார்.