இப்போதெல்லாம் இணையதளத்தில் சமூக வலைதளங்கள், வாட்ஸ் ஆப் என மீம்ஸ் வழியாக கேலி, கிண்டல்கள் அதிகமாகிவிட்டன. வெகு சீக்கிரமாகவும் இது பரவி விடுகிறது.
இந்நிலையில் இன்று சென்னை, தி.நகரில் பிரபல துணிக்கடையில் பெரும் தீ விபத்து நிகழ்ந்தது. தீயணைப்பு துறையினரும் தீயை சிரமத்துடன் அணைத்தனர். அதில் கடையின் முகப்பில் இருந்த கீர்த்தி சுரேஷ் பேனரும் எரிந்தது.
இதை சமூக வலைதளங்களில் பலர் நேரலையாக ஒளிபரப்பினர். இதை பார்த்த ஒருவர் நடிகை கீர்த்தி சுரேஷை குறிப்பிட்டு கமெண்ட் செய்திருந்தார். கடை எரிஞ்சா பரவாயில்ல.
கீர்த்தி சுரேஷும் சேர்ந்து எரியுதே என போட்டிருந்தார். அவரின் இந்த கமெண்ட் நகைச்சுவையாக இருந்தது. ஆனால் இதுபோன்ற சமயத்தில் இந்த மாதிரியான கமெண்ட்களை தவிர்க்கலாமே.
கீர்த்தி சுரேஷ் இக்கடையின் விளம்பரத்தில் நடித்திருந்தார் என்பது குறிப்படத்தக்கது.