கர்நாடக திரையுலகில் மிகவும் பிரபலமான நடிகர்களில் ஒருவர் மறைந்த ராஜ்குமார் அவர்கள். இவரின் மனைவி பர்வதம்மா கடந்த சில வாரமாக உடல்நலக் குறைவால் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார்.
இதற்கு முன்பே இவர் இறந்துவிட்டதாக பல வதந்திகள் வந்தது, அப்போதே அந்த தகவலை அவரது மகன் ராகவேந்திரா ராஜ்குமார் மறுத்திருந்தார்.
இந்த நிலையில் இன்று காலை (மே 31) பர்வதம்மா உயிரிழந்துள்ளார். தற்போது இவரின் உடலுக்கு பல திரையுலக பிரபலங்கள் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். இவருக்கு புனித் ராஜ்குமார், சிவ ராஜ்குமார், ராகவேந்திரா ராஜ்குமார் என மூன்று மகன்களும், இரண்டு மகள்களும் உள்ளனர்.