ஜேர்மனியின் பெர்லினில் தற்கொலைப் படைத் தாக்குதல் நடத்த திட்டமிட்ட அகதி சிறுவனை பொலிசார் கைது செய்துள்ளனர்.
17 வயது மதிக்கத்தக்க குறித்த சிறுவனை Brandenburg மாகாணத்தின் Uckermark பகுதியில் வைத்து பொலிசார் கைது செய்தனர்.
இத்தகவலை உள்துறை அமைச்சர் Karl Heinz Schröter உறுதி செய்துள்ளார்.
தாக்குதல் நடத்த திட்டமிட்டவர் சிரியா நாட்டை சேர்ந்தவர் என்பதும், 2015ம் ஆண்டு ஜேர்மனிக்கு புலம்பெயர்ந்து வந்ததும் தெரியவந்துள்ளது.
2016ம் ஆண்டு முதல் Uckermark-ல் ஆதரவற்ற அகதி சிறுவர்கள் தங்கும் இடத்தில் தங்கியிருந்ததும் தெரியவந்துள்ளது.
தாக்குதலுக்கான காரணம் குறித்து பொலிசார் மேலதிக விசாரணை நடத்தி வருகின்றனர்.