நிஜவாழ்வில் கேன்சர் பாதிப்புக்குள்ளான கவுதமி சிகிச்சைக்கு பிறகு அதிலிருந்து மீண்டார். நடிப்பிலிருந்து ஒதுங்கி இருந்தவர் கடந்த 2015ம் ஆண்டு பாபநாசம் படம் மூலம் மீண்டும் நடிக்க வந்தார். தமிழில் ஒரு படத்துடன் ஒதுங்கிக்கொண்டவர் தற்போது மலையாளத்தில் 3 படங்களில் நடிக்கிறார். நோயின் பாதிப்பை அனுபவபூர்வமாக உணர்ந்தவர், மலையாளத்தில் நடிக்கும் ‘இ’ படத்தில் அல்ஸைமெர் பாதிப்புக்குள்ளானவராக நடிக்கிறார்.
மூளையின் நரம்பு மண்டலத்தில் ஏற்படும் பாதிப்பினால் சமீபத்திய நிகழ்வுகளை மறந்துவிடுவது உள்ளிட்ட சில பாதிப்புகள் கொண்டவராக வேடம் ஏற்றிருக்கிறார். இதுபற்றி கவுதமி கூறும்போது, ‘இக்கதைக்களம் என்னை மிகவும் கவர்ந்தது. அதனால் நடிக்க ஒப்புக்கொண்டேன். சுரேந்திரன் இயக்குகிறார்’ என்றார்.