பிரபல மாடல் அழகி சோனிகா கார் விபத்தில் மரணம் அடைந்துள்ளது ரசிகர்களை அதிர்ச்சியாக்கியுள்ளது. பிரபல மாடல் அழகியும், நடிகையுமான சோனிகா மற்றும் நடிகர் பிக்ரம் சட்டோபாத்யாய் இருவரும் கொல்கத்தாவில் காரில் பயணம் செய்துள்ளனர்.
அப்போது காரில் ஏற்பட்ட கோளாறு காரணமாக கார் விபத்துக்குள்ளாகியுள்ளது. இதனால் சம்பவ இடத்திலேயே சோனிகா மரணம் அடைய, பிக்ரம் அருகில் இருந்தவர்களால் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு தற்போது ICUவில் தீவிர சிகிச்சை பெற்று வருகிறார்.
தற்போது சோனிகா ஒரு நேஷ்னல் தொலைக்காட்சியில் பிரபல நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகிறாராம். பிக்ரம் நடிப்பில் கடைசியாக Khoj என்ற திரைப்படம் வெளியாகி இருக்கிறது. இப்படம் பல Film Festivalலில் திரையிடப்பட்டிருக்கிறது