ரஷ்யாவில் இடம்பெற்ற தீவிரவாத தாக்குதலில் கொல்லப்பட்டவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக பாரிஸில் உள்ள உலக புகழ்ப்பெற்ற சின்னமான ஈபிள் கோபுரத்தின் விளக்குகள் அணைக்கப்பட்டன.
ரஷ்ய மெட்ரோ ரயில் நிலையத்தில் இடம்பெற்ற தீவிரவாத தாக்குதலில் சிக்கி 11 பேர் உடல் சிதறி கொல்லப்பட்டதுடன் 50-கும் மேற்பட்டவர்கள் படுகாயமடைந்தனர். இத்தாக்குதல் நடத்தியது 22 வயதான கிர்கிஸ்தான் நாட்டவர் என தெரிய வந்துள்ளது.
இந்நிலையில், பாரிஸ் மேயர் Anne Hidalgo டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்ட பதிவில், ரஷ்யாவில் இடம்பெற்ற தீவிரவாத தாக்குதலில் கொல்லப்பட்டவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக பாரிஸில் உள்ள உலக புகழ்ப்பெற்ற சின்னமான ஈபிள் கோபுரத்தின் விளக்குகள் அணைக்கப்பட்டும் என அறிவித்தார்.
Ce soir, à minuit, #Paris éteindra @LaTourEiffel en hommage aux victimes de l’attentat de #SaintPetersbourg. #NousSommesUnis
அதன் படி உலக புகழ்ப்பெற்ற சின்னமான ஈபிள் கோபுரத்தின் விளக்குகள் நேற்று இரவு அணைக்கப்பட்டன.