Easy 24 News

சின்னமுத்து வெளிப்பாடு குறித்து விமான பயணிகள் எச்சரிக்கப்படுகின்றனர்.

ரொறொன்ரோ பொது சுகாதார அதிகாரிகள் அண்மைக்காலங்களில் சில குறிப்பிட்ட விமானங்களில் பயணித்தவர்கள் சின்னமுத்து வெளிப்பாட்டினால் பாதிக்கப்பட்டிருக்கலாம் என மக்களை எச்சரிக்கின்றனர்.
கீழ் குறிப்பிடப்பட்டுள்ள விமானங்களில் பயணம் செய்திருந்தால் சின்னமுத்து நோயத்தடுப்பு பதிவேடுகளை சரிபார்த்து கொள்ளுமாறும் நோய்க்கான அறிகுறிகள் காணப்படுகின்றனவா என கவனிக்குமாறு மக்கள் எச்சரிக்கப்படுகின்றனர்.

எமிரேட்ஸ் விமான சேவை விமானம்EK517, மார்ச் 19 டெல்கி இந்தியாவிலிருந்து புறப்பட்டு டுபாயை சென்றடைந்தது.
எமிரேட்ஸ் விமான சேவை விமானம்EK241, நுமு241இமார்ச் 20 டுபாயை விட்டு புறப்பட்டு ரொறொன்ரோ வந்தடைந்தது.
வெஸ்ட் ஜெட் WS450, அபொட்ஸ்வோர்ட் பிரிட்டிஷ் கொலம்பியாவில் இருந்து மார்ச் 22 புறப்பட்டு கல்கரி வந்தடைந்தது.
WS610, வெஸ்ட் ஜெட் விமானம் கல்கரியில் இருந்து மார்ச் 22ல் ஒட்டாவா சென்றது.
வெஸ்ட் ஜெட் விமானம் WS369, மார்ச்22 ஒட்டாவாவிலிருந்த ரொறொன்ரோ வந்தடைந்தது.
ரொறொன்ரோவிலிருந்து மார்ச் 23 புறப்பட்டு மொன்றியல் சென்ற வெஸ்ட் ஜெட் விமானம்.
WS581 வெஸ்ட் ஜெட விமானம் மொன்றியலிலிருந்து மார்ச் 24ரொறொன்ரோ வந்தடைந்தது.
வெஸ்ட் ஜெட் விமானம் WS2668, ரொறொன்ரோவிலிருந்து ரேக்ஸ் மற்றும் கைகொஸ் தீவுகளிற்கு மார்ச் 24 புறப்பட்டது.
WS2669, விமானம் மார்ச் 24 ரொறொன்ரோவிலிருந்து ரேக்ஸ் மற்றும் கைகொஸ் தீவுகளிற்கு புறப்பட்டது.
தடுப்பு சக்தி வீழ்ச்சியினால் ஐரோப்பாவில் கொடிய சின்னமுத்து வெளிப்பாடு பரவியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ரோமேனியாவில் கிட்டத்தட்ட 2,000 சின்னமுத்து பாதிப்புக்கள் 2016ல் ஏற்பட்டதாக உலக சுகாதார அமைப்பு தரவு காட்டுகின்றதாக கூறப்பட்டுள்ளது.
அந்த நாட்டின் தடுப்பூசி விகிதாசாரம் 86 சதவிகிதம் எனவும் தொற்ற கூடிய நோய்களிற்கெதிரான விகிதம் 95 எனவும் 86 மிக குறைந்ததெனவும் தெரிவிக்கப் பட்டுள்ளது.
ரோமேனியாவில் இது வரை 17-சிறுவர்கள் மரணமடைந்துள்ளனர்.

meas1meas2

Next Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *