பனிக்கட்டிக்குள் விழுந்து 6-வயது சிறுவன் மரணம் சகோதரன் வைத்தியசாலையில்!

பனிக்கட்டிக்குள் விழுந்து 6-வயது சிறுவன் மரணம் சகோதரன் வைத்தியசாலையில்!

அல்பேர்ட்டா- சிறுவன் ஒருவனின் மரணம் மற்றும்  மூழ்கும் தறுவாயில் அவனது சகோதரன் ஆகிய துர்ப்பாக்கிய சம்பவத்தால் Airdrie சமுதாயம் அதிர்ச்சியில் ஆழ்ந்துள்ளது.

ஆறு வயது சிறுவன் ஒருவன் இறந்து விட்டான் அவனது மூத்த சகோதரன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளான். இருவரும் திங்கள்கிழமை பிற்பகல் பனிக்கட்டிக்குள் விழுந்ததால் இச்சம்பவம் நடந்துள்ளது.

தீயணைப்பு படையினர் இருவரையும் தண்ணீருக்குள் இருந்து மீட்டெடுத்துள்ளனர்.இளைய சிறுவன் ஆகாய மூலமாக அல்பேர்ட்டா சிறுவர் வைத்திய சாலைக்கு கொண்டு செல்லப்பட்டான்.ஆனால் ஏற்பட்ட காயங்களினால் சிறிது நேரத்தில் இறந்து விட்டதாக கூறப்பட்டது.

தீயணைப்பு காரியாலயம் சம்பவ இடத்திற்கு அண்மையில் இருந்த போதிலும் துரதிஷ்ட வசமாக சிறுவனை காப்பாற்ற முடியவில்லை என கூறப்பட்டது.

10வயது பையன் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டான். இருவரும் எவ்வளவு நேரம் தண்ணீருக்குள் இருந்தனர் என்பது தெரியாதென ஆர்சிஎம்பி தெரிவித்தது.

உருகும் தண்ணீர் இந்த வடிகால் குளங்களிற்குள் செல்வதால் ஐஸ் மிகவும் நிலையற்றதாக காணப்படும். தட்டையாகவும் பழமையானதுமாக ஏரி போன்று இருக்க மாட்டாது.

இந்த பகுதிகளை அண்மிக்காது இருப்பது பாதுகாப்பானதென அறிவுறுத்தப்படுகின்றது.

dieboy1boy2boy3boy

Next Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *