Monday, August 25, 2025
Easy 24 News
Advertisement
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
Easy 24 News
No Result
View All Result
Home News

நாளை பதில் கிடைக்காவிட்டால் உயிரை மாய்த்துக்கொள்வோம் : கால அவகாசம் வழங்கிய கேப்பாப்புலவு மக்கள்

February 7, 2017
in News
0
நாளை பதில் கிடைக்காவிட்டால் உயிரை மாய்த்துக்கொள்வோம் : கால அவகாசம் வழங்கிய கேப்பாப்புலவு மக்கள்

நாளை பதில் கிடைக்காவிட்டால் உயிரை மாய்த்துக்கொள்வோம் : கால அவகாசம் வழங்கிய கேப்பாப்புலவு மக்கள்

முல்லைத்தீவு – கேப்பாப்புலவு மக்கள் தமது சொந்த நிலத்தை விமானப்படையினர் விடுவிக்கவேண்டுமென விமானப்படை முகாமின் முன்பாக தொடர்ந்து ஏழாவது நாளாக இன்றும் கவனயீர்ப்பு போராட்டத்தை முன்னெடுத்துள்ளனர்.

கைக்குழந்தைகளுடன் கொட்டும் பனியிலும், சுட்டெரிக்கும் வெயிலிலும் தமது போராட்டத்தை முன்னெடுத்துள்ளதுடன் பொறுமையை இழந்த மக்கள் இன்று எச்சரிக்கை ஒன்றை விடுத்துள்ளனர்.

அதாவது, “நாளை (07,02,2017) மாலை 6 மணிக்குள் உரிய பதில்கள் கிடைக்காவிட்டால் எமது போராட்ட வடிவம் மாறும், எங்களில் ஒருவர் தற்கொலை செய்து உயிரை மாய்த்தேனும் சொந்த நிலங்களை மீட்பதற்கான வழியை மேற்கொள்வோம்” என எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும் நாளை பாராளுமன்ற அமர்வு நடைபெற இருப்பதனால் அங்கு இந்த விடயம் குறித்து பேசுவதாகாக பல பாராளுமன்ற உறுப்பினர்களும் உறுதி வழங்கி இருந்தனர்.

இந்த நிலையில் நாளை (07,02,2017) மாலை 6 மணி வரைக்கும் அனைத்து அரசியல்வாதிகளுக்கும் மக்கள் காலஅவகாசம் கொடுத்துள்ளனர்.

கேப்பாப்புலவு பிலக்குடியிருப்பு கிராமத்தில் 84 குடும்பங்களுக்கு சொந்தமான 40 ஏக்கருக்கு மேற்பட்ட காணிகளை கையகப்படுத்தி விமானப்படைத்தளம் அமைத்துள்ள விமானப்படையினர் அதனை பலப்படுத்தி வேலிகள் அமைத்து மக்கள் செல்லமுடியாதவாறு தடைகளை ஏற்படுத்தியுள்ளனர்.

இந்த நிலையில் கடந்த மாதம் 31 ஆம் திகதி காணிகள் அளவிடப்படும் எனவும் காணிகளுக்கு சொந்தமான மக்கள் அனைவரையும் அப்பகுதிக்கு வருமாறும் கேப்பாப்புலவு கிராமசேவகர் அறிவித்தல் விடுத்திருந்தனர்.

அப்பகுதிக்கு வருகைதந்திருந்த மக்கள் நாள்முழுவதும் வீதியில் காத்திருந்த போதும் அதிகாரிகள் எவரும் காணிகள் அளவிட வருகைதந்திருக்கவில்லை. இந்த நிலையில் ஆத்திரமடைந்த மக்கள் அன்றையதினம் முதல் தாம் தமது சொந்த நிலங்களில் காலடி எடுத்து வைக்கும் வரை போராட்டம் தொடருமென கூறி தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

குறித்த போராட்டம் இடம்பெறும் பகுதிக்கு முல்லைத்தீவு மாவட்ட அரச அதிபரும், கரைத்துறைப்பற்று பிரதேச செயலாளரும் வன்னி பிராந்திய விமானப்படை தளபதியும் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்கள் மாகாணசபை உறுப்பினர்கள் எனப் பலரும் வருகைத் தந்து மக்களோடு கலந்துரையாடி சமரச முயற்சிகளில் ஈடுபட்ட போதிலும் மக்கள் உறுதியான நிலைப்பாட்டில் தமது சொந்த நிலத்தில் காலடி எடுத்து வைத்தால்தான் இந்த போராட்டம் நிறைவுபெறும் எனக் கூறி தொடர்ந்தும் போராடி வருகின்றனர்.

இந்த நிலையில் இன்றையதினம் (06.02.2017) வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சிவமோகன் மற்றும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சுரேஸ் பிரேமசந்திரன் வடக்கு மாகாணசபை உறுப்பினர் ரவிகரன் மற்றும் புவனேஸ்வரன் ஆகியோர் வருகைத்தந்து மக்களுடன் கலந்துரையாடினர்.

அத்தோடு மக்கள் தமது உணவுகளை தாமே மரங்களுக்கு கீழே சமைத்து உண்டு வருகின்றனர். களத்தில் உள்ள மாணவர்கள் வீதி ஓரத்திலேயே தமது பாடசாலையில் வழங்கப்பட்ட வீட்டு வேலைகளை செய்வதோடு அனைவரும் இணைந்து தமது கல்வி நடவடிக்கைகளை மேற்கொள்வதனை அவதானிக்க முடிகின்றது.

அத்தோடு இன்று முல்லைத்தீவு கல்வி வலயத்திலிருந்து வந்த பிரதிக்கல்வி பணிப்பாளர் ஆதவன் தலைமையிலான ஆசிரியர் குழுவினர் மாணவர்களின் கல்வி நடவடிக்கைகள் குறித்து ஆராய்ந்ததோடு சில கற்பித்தல்களையும் மேற்கொண்டனர்.

இன்றையதினம் போராட்டத்தில் ஈடுபட்டுவரும் இடத்திற்கு முல்லைத்தீவு மாவட்ட வைத்தியசாலையிலிருந்து வருகைதந்த விசேட மருத்துவக்குழு பாதிக்கப்பட்ட சிறுவர்கள் மற்றும் முதியவர்கள் பெண்கள் அனைவருக்கும் மருத்துவ பரிசோதனைகள் மேற்கொண்டு மருந்துகளும் வழங்கப்பட்டன.

மேலும் இந்த மக்களின் போராட்டம் வெற்றிபெற ஆசிவேண்டி கேப்பாப்புலவு முத்துவிநாயகர் ஆலயத்தில் உள்ள பூசாரி ஒருவர் தொடர் சிவ வழிபாட்டு பூசை ஒன்றினை இன்றுமுதல் ஆரம்பித்துள்ளார்.

போராடத்தில் ஈடுபடும் மக்களுக்கான் உணவு மற்றும் இதர உதவிகளை அயல் கிராம மக்களும் இளைஞர்களும் சிவில் சமூக அமைப்புகளும் வழங்கி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

 
Previous Post

வடக்கில் மீண்டும் யுத்தம் ஏற்பட்டால் அதற்கு இவர்தான் முழுக் காரணம்!

Next Post

சென்னை ஆளுநர் மாளிகை முற்றுகை? திடீர் பொலிஸ் குவிப்பால் பரபரப்பு!

Next Post
சென்னை ஆளுநர் மாளிகை முற்றுகை? திடீர் பொலிஸ் குவிப்பால் பரபரப்பு!

சென்னை ஆளுநர் மாளிகை முற்றுகை? திடீர் பொலிஸ் குவிப்பால் பரபரப்பு!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures