கூகுள் நிறுவனத்தின் 20 மில்லியன் டொலர் பரிசு: வெல்லப்போவது யார்?
இணையத்தில் வல்லரசாகத்திகழும் கூகுள் நிறுவனம் இணைய சேவையினையும் தாண்டி பல்வேறு துறைகளில் ஆராய்ச்சிகளை மேற்கொண்டுவருவது அறிந்ததே.
இவ் ஆய்வில் மாணவர்களையும் உள்ளீர்க்கும் கூகுள் அவர்களுக்க பரிசுத்தொகைகளையும் வழங்கிவருகின்றது.
இதன் தொடர்ச்சியாக தற்போது விண்வெளி தொடர்பான ஒரு போட்டியினை கூகுள் நிறுவனம் ஆரம்பித்துள்ளது.
இப் போட்டியானது சந்திரனில் விண்வெளி ஓடம் ஒன்றினை நிறுத்துவதாகும்.
இதற்காக உலகளாவிய ரீதியில் ஐந்து அணிகளை கூகுள் நிறுவனம் தேர்வுசெய்துள்ளது.
இந்த அணிகளில் எந்த அணி 2017ம் ஆண்டு 31ம் திகதிக்கு முன்னர் சந்திரனில் விண்வெளி ஓடத்தினை நிறுத்துகின்றதோ அந்த அணிக்கு 20 மில்லியன் அமெரிக்க டொலர்களை பரிசாக வழங்கவுள்ளது.
இந்த போட்டி தற்போது இறுதிக்கட்டத்தினை அடங்கியுள்ள போதிலும் 2007ம் ஆண்டே ஆரம்பிக்கப்பட்டுவிட்டது.
Lunar XPRIZE எனும் பெயரில் ஆரம்பிக்கப்பட்ட இப் போட்டியில் 11 அணிகள் பங்கேற்றிருந்தன.
இந்நிலையிலேயே தற்போது ஐந்து அணிகள் இறுதிப்போட்டியில் கலந்துகொள்கின்றன.