தொலைக்காட்சி நேரலையில் சரிந்த 17 மாடி கட்டிடம்: பதற வைக்கும் வீடியோ
ஈரானில் தொலைக்காட்சி நேரலையின் போது 17 மாடி கட்டிடம் சரிந்து தரைமட்டமான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தலைநகர் Tehranனில் உள்ள பெரிய ஷொப்பிங் சென்டரே இவ்வாறு சரிந்து விபத்துக்குள்ளாகியுள்ளது.
சம்பவத்தன்று காலை ஷொப்பிங் சென்டரில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து சம்பவயிடத்திற்கு பொலிசார் மற்றும் தீயணைப்பு துறையினர் விரைந்து உள்ளே இருந்த கடைகாரர்கள் மற்றும் பொதுமக்கள் அனைவரையும் வெளியேற்றியுள்ளனர்.
இதனையடுத்து, தீயணைப்பு துறையினர் தீயை கட்டுபடுத்தும் பணியில் ஈடுபட்டுக்கொண்டிருந்த போது திடீரென 50 ஆண்டு பழமையான 17 மாடி கட்டிடம் சரிந்து விழுந்து விபத்துக்குள்ளானது.
தீ விபத்தையடுத்து உள்ளூர் செய்தி தொலைக்காட்சி ஒன்று நேரலையில் கட்டிடத்தை ஒளிபரப்பிக்கொண்டிருந்த நிலையில் கட்டிடம் சரிந்த காட்சி கமெராவில் பதிவாகியுள்ளது.
விபத்தின் போது கட்டிடத்தின் உள்ளே சுமார் 30 தீயணைப்பு வீரர்கள் பணியில் ஈடுபட்டுக்கொண்டிருந்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
தற்போது, கட்டிடத்தின் இடிந்த குவியலில் சிக்கி உயிருக்கு போராடி வரும் வீரர்களை மீட்கும் பணியில் வீரர்கள் தீவிரமாக ஈடுபட்டுவருகின்றனர்.
விபத்தின் போது கட்டிடத்திற்கு வெளியே சிக்கி காயமடைந்த 25 பேர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. எனினும், பலி எண்ணிக்கை அதிகரிக்ககூடும் என அஞ்சப்படுகிறது.

