ரஜினிகாந்தை விமர்சித்த சரத்குமார் உருவப்படம், கட்சிகொடி எரிப்பு- ரசிகர்கள் கண்டனம்
நடிகர் சரத்குமர், ரஜினிகாந்த் தமிழக அரசியலை பற்றி பேசுவதற்கு தகுதியற்றவர், அவர் அரசியலுக்கு வந்தால் அவரை எதிர்க்கும் முதல் ஆள் நான்தான் என்று விமர்சித்துள்ளார்.
நேற்று துக்ளக் விழாவில் ரஜினிகாந்த தமிழகத்தில் அசாதாரண சூழல் நிலவுகிறது என்று கூறியிருந்தார். இதை எதிர்த்து தான் நடிகர் சரத்குமார் ரஜினியை இப்படி விமரசித்துள்ளார்.
இதையடுத்து ரஜினி ரசிகர்கள் சரத்குமாரின் உருவப்படம், கட்சிகொடி எரித்து சரத்குமார் ஒழிக என்று தமிழகத்தில் சில இடங்களில் கோஷம் எழுப்பி வருகின்றனர். அவர் மன்னிப்பு கேட்கும் வரை இந்த பிரச்னையை விடமாட்டோம் என்று கூறியுள்ளனர்.