சிலியில் பயங்கர நிலநடுக்கம்: சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டதால் மக்கள் பீதி!
சிலி நாட்டில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இது ரிக்டர் அளவு கோலில் 7.7 ஆக பதிவாகியுள்ளது.
இந்த பயங்கர நிலநடுக்கத்தை தொடர்ந்து சுனாமி எச்சரிக்கையும் விடுக்கப்பட்டதால் மக்கள் பீதி அடைந்துள்ளனர்.
தெற்கு சிலியில் உள்ள பியூர்டோ மான்ட்டுக்கு தென் மேற்கே 1240 மைல் தூரத்தில் இந்த நிலநடுக்கத்தின் மையம் கொண்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
நிலநடுக்கத்தின் மையம் இருந்த இந்த பகுதிக்கு அருகில் உள்ள குல்லான் என்ற நகரம் தான் பெரும் பாதிப்பைச் சந்தித்துள்ளதாக தெரிகிறது.
பூமிக்குக் கீழே 15 கிலோமீட்டர் ஆழத்தில் நிலநடுக்கம் ஏற்பட்டதாகவும் அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டதால் லாஸ் லாகோஸ் பகுதி முழுவதும் கடலோரத்தில் வசித்து வரும் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்ல உத்தரவிடப்பட்டுள்ளது.
இந்த நிலநடுக்கம் காரணமாக 3 மீற்றர் அளவிலான சுனாமி அலைகள் எழும்பக் கூடும் என்று பசிபிக் சுனாமி எச்சரிக்கை மையம் தெரிவித்துள்ளது.