அண்மையில் ஶ்ரீலங்கா ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்கவின் பிறந்த நாளில் அவருக்கு வாழ்த்துப் பதிவை இட்டிருந்தேன். அது என் தேச உறவுகள் சிலருக்கு மனக் கிலேசத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஒரு ஊடகவியலாளனாக , கருத்துச் சுதந்திரத்தை மதிப்பவனாக நல்ல கருத்துக்களை வரவேற்கும் அதே தருணத்தில் விமர்சனங்களையும் ஆரோக்கியமான உரையாடல்களையும் நிகழ்த்துவது என் விருப்பமாகும்.
ஶ்ரீலங்கா அரசுமீதான எமது முறைப்பாடுகள், குற்றச்சாட்டுக்கள், இனப்படுகொலை குறித்த நிலைப்பாடு, தமிழ் தெசிய அரசியல் தீர்வுக்கான போராட்டம் என்பவற்றில் ஒருபோதும் விட்டுக்கொடுப்பு இருக்காது.
ஆனால் நண்பர்களே ஒரு விவாதமாக இக் கருத்தை உங்களுடன் பகிர்ந்துகொள்ள எண்ணுகிறேன். கடந்த கால ஆட்சியாளர்கள் போலின்றி, ஜனாதிபதி அனுர, கடந்த காலத்தில் எம்மை படுகொலை செய்த மகிந்த ராஜபக்ச குடும்பத்தை ஆட்டிப் படைக்கிறார் அல்லவா?
அத்துடன் எம் தேசத்திற்கு எதிராக செயற்ட்ட பலரை சிறையில் தள்ளுகிறார். இன்று டக்ளஸ் தேவானந்தாவே வாலைச் சுருட்டியுள்ளார். அத்துடன் இலஞ்சம், ஊழல் போன்றவற்றை ஒழிப்பதிலும்கூட கடந்த கால ஆட்சியாளர்களைப் போலின்றி சிறப்பாக செயல்படுகிறார் என்று எடுத்துக்கொள்ளலாமா?
இத்தகைய போக்கு கொண்ட ஒரு இலங்கை தலைவரிடம் ஏன் எமது தலைமைகள் ஒற்றுமையாக ஒரு அரசியல் தீர்வுக்கான பயணத்தை போராட்டத்தை முன்னெடுக்கக்கூடாது.
கடந்த காலத்தில் எமது விடுதலை அமைப்பு சில பேச்சுவார்த்தைகளை சில உடன்படிக்கைகளை செய்தும் ஆட்சியாளர்களின் முகத்தையும் போக்கையும் உலகிற்கு வெளிப்படுத்தினர்தானே?
இது பற்றிய ஆரோக்கியமான உங்கள் கருத்துக்களை வேண்டி நிற்கிறேன்.
ஊடகப் போராளி கிருபா பிள்ளை












