Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

யுத்தத்தால் இடம்பெயர்ந்த மக்களின் வீட்டுப் பிரச்சினைக்கு 2028 டிசம்பருக்குள் நிரந்தரத் தீர்வு – அமைச்சர் சுசில் ரணசிங்க

November 26, 2026
in News, Sri Lanka News, முக்கிய செய்திகள்
0
யுத்தத்தால் இடம்பெயர்ந்த மக்களின் வீட்டுப் பிரச்சினைக்கு 2028 டிசம்பருக்குள் நிரந்தரத் தீர்வு – அமைச்சர் சுசில் ரணசிங்க

யுத்தத்தினால் பாதிக்கப்பட்டும் வீடுகளை இழந்து நீண்டகாலமாக நலன்புரி நிலையங்கள் வாழ்ந்து தற்போதும் கூடாரங்கள் மற்றும் தற்காலிகக் குடியிருப்புகளில் வாழ்ந்து வரும் மக்களின் வீட்டுப் பிரச்சினைக்கு 2028ஆம் ஆண்டு டிசம்பர் மாதத்திற்குள் நிரந்தரத் தீர்வை வழங்குவதே அரசாங்கத்தின் இலக்காகும் என வீடமைப்பு, நிர்மாணத்துறை மற்றும் நீர்வழங்கல் அமைச்சர் வைத்திய கலாநிதி எச். எம். சுசில் ரணசிங்க தெரிவித்தார்.

வீடமைப்பு, நிர்மாணத்துறை மற்றும் நீர்வழங்கல் அமைச்சினால் யாழ்ப்பாண மாவட்டத்தில் முன்னெடுக்கப்படும் வீட்டுத்திட்டத்தின் கீழ், தெல்லிப்பழை பிரதேச செயலகப் பிரிவில் வீடமைப்புத் திட்டத்தைப் பூர்த்தி செய்த பயனாளிகளுக்கான சான்றிதழ்கள் வழங்கும் நிகழ்வு இன்று புதன்கிழமை (25) பலாலி வடக்கு ஆரோக்கிய மாதா தேவாலய மண்டபத்தில் நடைபெற்றது.

இந்நிகழ்வில் பிரதம அதிதியாகக் கலந்துகொண்டு பயனாளிகளுக்கான வீட்டுத்திட்டச் சான்றிதழ்களை வழங்கி வைத்து உரையாற்றுகையிலேயே அமைச்சர் இதனை தெரிவித்தார்.

யுத்தத்தினால் வீடுகளை இழந்து சுமார் 20 ஆண்டுகளாக நலன்புரி நிலையங்களில் வாழ்ந்த குடும்பங்கள் இன்றும் தற்காலிகக் கூடாரங்களில் வசித்து வருகின்றனர். அந்தக் கூடாரங்களிலேயே அவர்களது பிள்ளைகள் பிறந்து, வளர்ந்து, கல்வி கற்றுள்ளமை மிகுந்த கவலைக்குரிய விடயமாகும். மக்கள் தொடர்ந்து இத்தகைய தற்காலிகக் குடியிருப்புகளில் வாழ்வதை அரசாங்கம் ஏற்றுக்கொள்ள முடியாது. எனவே, பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு நிரந்தர வீடுகளை அமைத்துக் கொடுப்பதற்கு முன்னுரிமை அளித்து நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுகின்றன

யாழ்ப்பாணம், கிளிநொச்சி, முல்லைத்தீவு உள்ளிட்ட யுத்தத்தால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களிலுள்ள மக்களுக்கு சுமார் 13000 மேற்பட்ட குடும்பங்களுக்கு வீடுகளை அமைப்பதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுவருவதாகவும், அதன் அடிப்படையில் கட்டம் கட்டமாக வீடுகளை நிர்மாணித்துக் கொடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது

இதற்கமைய, இவ்வாண்டும் 20 இலட்சம் ரூபா பெறுமதியான வீட்டுத் திட்டம் வழங்கப்பட்டுள்ளது எனவும், 2027ஆம் ஆண்டில் சுமார் 5,000 வீடுகளையும், 2028ஆம் ஆண்டில் எஞ்சியுள்ள வீடுகளையும் நிர்மாணிப்பதற்குத் திட்டமிடப்பட்டுள்ளது. இந்த வீட்டுத்திட்டங்கள் முழுமையான நிவாரண அடிப்படையில் முன்னெடுக்கப்படுவதுடன், பயனாளிகள் பெற்றுக்கொள்ளும் நிதியைத் திருப்பிச் செலுத்த வேண்டிய அவசியமில்லை. 2028 டிசம்பர் மாதத்திற்குள் யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட அனைத்து மக்களுக்கும் நிரந்தர வீடுகளை அமைத்துக் கொடுப்பதே அரசாங்கத்தின் இலக்காகும் என அமைச்சர் தெரிவித்தார். .

கிளிநொச்சி, முல்லைத்தீவு உள்ளிட்ட மாவட்டங்களில் நிலவும் வறுமை, காணி வசதியின்மை மற்றும் குடியிருப்புப் பிரச்சினைகள் தொடர்பிலும் அரசாங்கம் விசேட கவனம் செலுத்தி வருவதாகக் குறிப்பிட்ட அமைச்சர், இப்பகுதி மக்களின் வீட்டுத் தேவைகளை நிறைவேற்றுவதற்கு 2027ஆம் ஆண்டிலும் கணிசமான நிதி ஒதுக்கீடுகள் மேற்கொள்ளப்படும்.

வீடமைப்பு அபிவிருத்தியுடன் மட்டுப்படுத்தப்படாமல், கிராமப்புற மக்களின் வாழ்க்கைத்தரத்தை உயர்த்தும் நோக்கில் 2027ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தில் கல்வி, போக்குவரத்து, சுகாதாரம் உள்ளிட்ட துறைகளின் அபிவிருத்திக்கும் கணிசமான நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளத்து.

வடக்கு, கிழக்கு, தெற்கு, மேற்கு என்ற பிரதேச வேறுபாடுகளைக் கடந்து, நாட்டின் அனைத்து மக்களினதும் வாழ்க்கைத்தரத்தை உயர்த்தி, சமமான அபிவிருத்தியை ஏற்படுத்துவதே அரசாங்கத்தின் நோக்கமாகும். இலங்கையில் புதிய அபிவிருத்தி யுகமொன்றை உருவாக்குவதற்கு அனைவரும் ஒன்றிணைந்து செயற்பட வேண்டும் என்றார்.

Previous Post

நடிகர் அருள்நிதி நடிக்கும் ‘வேட்ட சாமி’ படத்தின் டீசர் வெளியீடு

  • Trending
  • Comments
  • Latest
வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

May 20, 2022
ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

March 8, 2023
கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

June 6, 2023
ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

July 28, 2023
இராணுவ ஆட்சியின் பக்கம் நாடு பயணிப்பதை தடுக்க வேண்டும் – அநுரகுமார

மக்களின் எதிர்ப்பை தாக்குப்பிடிக்க முடியாத ‘கோட்டா ‘பதுங்கு குழியில் | அனுரகுமார

புலிகளுக்கு எதிரான போர் போன்று இனி உலகில் நடப்பதற்கு வாய்ப்பில்லை!

புலிகளுக்கு எதிரான போர் போன்று இனி உலகில் நடப்பதற்கு வாய்ப்பில்லை!

தமிழ் கைதிகளுக்கு மன்னிப்பு வழங்க முடியாது: கோத்தபாய ராஜபக்ஸ.

விளையாட்டு வினையான சம்பவம்: 4 வயது தம்பியை தவறுதலாக சுட்டுக்கொன்ற சகோதரன்.

யுத்தத்தால் இடம்பெயர்ந்த மக்களின் வீட்டுப் பிரச்சினைக்கு 2028 டிசம்பருக்குள் நிரந்தரத் தீர்வு – அமைச்சர் சுசில் ரணசிங்க

யுத்தத்தால் இடம்பெயர்ந்த மக்களின் வீட்டுப் பிரச்சினைக்கு 2028 டிசம்பருக்குள் நிரந்தரத் தீர்வு – அமைச்சர் சுசில் ரணசிங்க

November 26, 2026
நடிகர் அருள்நிதி நடிக்கும் ‘வேட்ட சாமி’ படத்தின் டீசர் வெளியீடு

நடிகர் அருள்நிதி நடிக்கும் ‘வேட்ட சாமி’ படத்தின் டீசர் வெளியீடு

November 26, 2026
நான் அனுரவை ஆதரிக்கிறேனா? – கிருபா பிள்ளை

நான் அனுரவை ஆதரிக்கிறேனா? – கிருபா பிள்ளை

November 25, 2026
அப்பா குட்டி – திரைப்பட விமர்சனம்

அப்பா குட்டி – திரைப்பட விமர்சனம்

November 25, 2026

Recent News

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures