இன்ஸ்டாகிராம் பிரபலமான வஹிதா அக்தர் அளித்த புகாரில் பிக் பாஸ் பிரபலம் முத்துக்குமரன் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் அவர் தலைமறைவாகிவிட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
இன்ஸ்டாகிராமில் பிரபலமாக இருக்கும் கடையநல்லூரை சேர்ந்த வஹிதா அக்தர் என்பவர் லைவில் வந்து தற்கொலைக்கு முயற்சி செய்தார்.அதன் பிறகு அவரை மருத்துவமனைக்கு கொண்டு சென்று காப்பாற்றிவிட்டார்கள். தன்னுடைய இந்த நிலைக்கு காரணம் பிக் பாஸ் டைட்டில் வின்னரான முத்துக்குமரன் தான் என தெரிவித்தார்.
அது மட்டும் அல்ல தாலி கட்டி மனைவியாக்கிக் கொள்கிறேன் என்று கூறி தன்னுடன் உடலுறவு வைத்துக் கொண்டு ஏமாற்றிவிட்டார் முத்துக்குமரன் என மேலும் புகார் தெரிவித்தார். அதை பார்த்த முத்துக்குமரனோ நாம் ஃப்ரெண்ட்ஸாக தானே பழகினோம் வஹிதா என போனில் பேசிய ஆதாரத்தையும் வெளியிட்டார்.
முத்துக்குமரன் அப்படி கேட்டதற்கு ஃப்ரெண்டா பழகும் பெண்ணுடன் தான் உறவு வைத்துக் கொள்வீர்களா என கேட்டார் வஹிதா. இன்ஸ்டாகிராமில் முத்துக்குமரன் தொடர்பாக தொடர்ந்து போஸ்ட் போட்டு வருவதுடன், ஸ்டோரீஸும் போட்டார். இதையடுத்து விருகம்பாக்கம் காவல் நிலையத்தில் முத்துக்குமரன் மீது புகார் அளித்தார். வஹிதா அளித்த புகாரின்பேரில் முத்துக்குமரன் மீது வழக்குப்பதிவு செய்தார்கள்.
இதையடுத்து தானும், வஹிதாவும் நண்பர்களாக பழகியதாகவும், தன் பெயரை கெடுக்க அவர் போலி வீடியோக்களை வெளியிடுகிறார் என்றும் சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் கொடுத்தார் முத்துக்குமரன். அந்த புகாரை விருகம்பாக்கம் போலீசார் ஆய்வு செய்து இதை வைத்து குற்றவியல் வழக்குப்பதிவு செய்ய முடியாது. அதனால் தேவைப்பட்டால் நீங்கள் நீதிமன்றத்திற்கு செல்லுங்கள் என்று கடிதம் அனுப்பி வைத்தார்கள்.
இந்த நிலையில் முத்துக்குமரனை செல்போனில் தொடர்பு கொள்ள முயன்றும் முடியவில்லை என்கிறார்கள் போலீசார். மேலும் அவரின் வீட்டிற்கு சென்றால் அது பூட்டியே கிடப்பதாகவும் கூறியுள்ளனர். 5 நாட்களுக்கும் மேலாக பூட்டியபடியே இருக்கிறது. இதையடுத்தே முத்துக்குமரன் தலைமறைவாகிவிட்டதாக பேச்சு கிளம்பியிருக்கிறது. இதற்கிடையே முத்துக்குமரனை பிடிக்க இரண்டு தனிப்படைகள் அமைக்கப்பட்டிருக்கிறது என போலீஸ் தரப்பில் கூறப்பட்டிருக்கிறது. தனிப்படையினர் முத்துக்குமரனை தீவிரமாக தேடி வருகிறார்கள்.
முத்துக்குமரன் தன்னிடம் ஆசை வார்த்தை கூறி எப்படி எல்லாம் நடந்து கொண்டார் என்பதை பேட்டி ஒன்றில் விரிவாக கூறியிருந்தார் வஹிதா அக்தர். முத்து தனக்கு ஆயிரம் முத்தங்கள் கொடுத்ததாக கூறினார். தான் ஒன்றும் முத்துக்குமரன் பெயரை கெடுக்க பொய்யாக எதையும் சொல்லவில்லை என்றார் வஹிதா அக்தர்.
தனது செல்போனின் லாக்ஸ்கிரீனாக முத்துக்குமரனின் புகைப்படத்தை வைத்திருப்பதாக கடந்த 4ம் தேதி இன்ஸ்டாகிராமில் போஸ்ட் போட்டார் வஹிதா. முத்து செய்த துரோகத்தை மறக்கக் கூடாது என அப்படி அவரின் புகைப்படத்தை பயன்படுத்தியிருக்கிறாராம்.
வஹிதாவின் போஸ்ட்டுகள், பேட்டியை பார்த்த அவரின் ஊர்க்காரர்கள் மோசமாக பேசுகிறார்கள் என்று தெரிவித்தார். மேலும் அந்த பேச்சுக்கு எல்லாம் அசர மாட்டேன். நியாயம் கிடைக்கும் வரை ஓய மாட்டேன் என்று உறுதியாக தெரிவித்தார்.
இந்நிலையில் முத்துக்குமரன் இப்படி வீட்டில் இல்லாமல் அவரை போலீசார் தேடி வருவதால் பரபரப்பு ஏற்பட்டிருக்கிறது. பிக் பாஸ் நிகழ்ச்சியின் 10வது சீசனை விட முத்துக்குமரன்-வஹிதா அக்தர் சர்ச்சை தான் சுவாரஸ்யமாக இருக்கிறது என்கிறார்கள் மக்கள் செல்வன் விஜய் சேதுபதி தொகுத்து வழங்கி வரும் நிகழ்ச்சியை தொடர்ந்து பார்த்து வருபவர்கள். ஒரு சிலரோ, பேசாமல் வஹிதாவை பிக் பாஸ் போட்டியாளராக்கலாம் என ஐடியா கொடுத்திருக்கிறார்கள்.













