Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home Cinema

ஓம் – திரைப்பட விமர்சனம்

November 21, 2026
in Cinema, News, இந்தியா, முக்கிய செய்திகள்
0
ஓம் – திரைப்பட விமர்சனம்

தயாரிப்பு : வுண்டர்பார் பிலிம்ஸ் – ஆர் டேக் ஸ்டுடியோஸ்

நடிகர்கள் : தனுஷ், மம்முட்டி, சாய் பல்லவி, ஸ்ரீ லீலா, இந்திரன்ஸ், நஸ்ரூதின் ஷா, ரேணு தேசாய் மற்றும் பலர்.

இயக்கம்‌ : ராஜ்குமார் பெரியசாமி

மதிப்பீடு : 2 / 5

சிவ கார்த்திகேயன் நடிப்பில் வெளியாகி வணிக ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் வெற்றி பெற்ற ‘அமரன்’ திரைப்படத்தை இயக்கிய இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் ‘ஓம்’ உருவானதால் இப்படத்தைப் பற்றிய எதிர்பார்ப்பு ரசிகர்களிடத்தில் அதிகமாக இருந்தது.

அதிலும் தன்னுடைய ரசிகர்களை ஒன்றிணைத்து நற்பணி இயக்கமாக மாற்றி விரைவில் தமிழக அரசியலில் களமிறங்க திட்டமிட்டு காய் நகர்த்தி வரும் நடிகர் தனுஷ் நடிப்பில் இத் திரைப்படம் வெளியானதால்.. இப்படத்தில் ஏதேனும் குறியீடு சார்ந்த அரசியல் இருக்கும் என்ற எதிர்பார்ப்பும் ஏற்பட்டது. இந்நிலையில் இத்திரைப்படம் சாதாரண கொமர்ஷல் சினிமாவாக உருவாகி இருக்கிறதா?  அல்லது ரசிகர்களை உற்சாகப்படுத்தும் படைப்பாக இருக்கிறதா? என்பதை தொடர்ந்து காண்போம்.

தென்னிந்திய மாநிலங்களில் ஒன்றான ஆந்திர பிரதேச மாநிலத்தில் உள்ள வனப்பகுதியில் குறிப்பிட்ட பரப்பில் இயற்கையாக வளரும் சர்வதேச அளவில் அதிக மதிப்பு கொண்ட செம்மரங்களை வெட்டி, மரக்கட்டைகளாக கடத்தும் கும்பலின் சர்வதேச அளவிலான வலை பின்னல்களை கண்டறிந்து, அதனை முழுவதுமாக அழிக்க ஆந்திர மாநில காவல்துறை பிரத்யேகமான தனிப்படை ஒன்றை உருவாக்குகிறது.

இதற்கு தலைவராக செம்மர கட்டைகளை கடத்தும் போது கடத்தல் கும்பலால் தனது தந்தையையும் , கணவனையும் இழந்த நித்யா ரெட்டி எனும் உயர் காவல்துறை அதிகாரி  நியமிக்கப்படுகிறார். செம்மர கட்டை கடத்தல் கும்பலின் முக்கிய தமிழக புள்ளியாக திகழும் பர்மா கார்த்தி@  கார்த்திகேயனை குறி வைக்கிறது தனிப்படை.

இதற்காக காவல் துறையில் பிரத்யேக பயிற்சி பெற்ற பழனிவேல் எனும் உளவாளியை நித்யா ரெட்டி நியமிக்கிறார். இவர் தனது பெயரை திருக்குமரன் என மாற்றி வைத்துக் கொண்டு கார்த்திகேயனிடம் நெருக்கம் காட்டி அவருடைய நம்பிக்கைக்குரியவராக மாறுகிறார்.

தனது உயிரை காப்பாற்றிய திருக்குமரனிடம் தனக்கு விருப்பமில்லாத… ஆனால் மக்களுக்கு நலன் பயக்கும் என்பதால்.. செய்து வரும் சட்ட விரோத காரியமான செம்மரக்கட்டை கடத்தல் பற்றிய விவரங்களை பகிர்ந்து கொள்கிறார். இந்த சட்ட விரோத கும்பலை முழுவதுமாக பிடிப்பதற்கு நித்யா ரெட்டி- திருக்குமரன் இணைந்து ஒரு திட்டத்தை தயாரிக்கிறார்கள்.

அந்தத் திட்டம் என்ன? அந்த திட்டம் செயல்படுத்தப்படும் போது என்ன நடந்தது? செம்மரக்கட்டையை கடத்தும் சர்வதேச கும்பல் பிடிபட்டதா? இல்லையா? கார்த்திகேயனுக்கு திருக்குமரன் காவல்துறையின் உளவாளி என்பது தெரிந்ததா? இல்லையா? என்பதை விவரிப்பது தான் இப்படத்தின் கதை.

செம்மரக்கட்டை கடத்தலில் ஈடுபட்ட வட தமிழகத்தை சார்ந்த கூலி தொழிலாளர்கள் ஈவு இரக்கமின்றி ஆந்திர மாநில காவல்துறையினரால் சுட்டு படுகொலை செய்யப்பட்ட உண்மை சம்பவத்தை எடுத்துக்கொண்டு… இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமி தனக்கு வழங்கப்பட்டுள்ள படைப்பாக்க சுதந்திரத்துடன்… நித்யா ரெட்டி-  பர்மா கார்த்தி- திருக்குமரன் – ஆகிய கதாபாத்திரங்களை உருவாக்கி,  ஜனரஞ்சகமாக சொல்ல முயற்சித்திருக்கிறார்.

இதற்காக அவர் வைத்திருக்கும் ‘ஒபரேஷன் மோல்’ என்ற டைட்டிலுக்காக புத்திசாலித்தனமாக யோசித்த இயக்குநர்.. திரைக்கதையில் அப்பாவி தொழிலாளர்கள் காவல்துறையினரால் சுட்டுக் கொல்லப்பட்டது மனிதநேயமற்ற செயல் என்பதை உறுதியுடன் தெரிவித்திருக்க வேண்டும். இதுபோன்ற செயல் இந்தியாவில் எங்கும் இனி நடைபெற கூடாது என்பது தொடர்பான விழிப்புணர்வையும் , விவாதத்தையும் ஏற்படுத்தி இருக்க வேண்டும். ஆனால் அதை செய்யவில்லை.

காவல் துறையில் தனிப்படை அமைக்கும் போது அதற்கு தலைமை பொறுப்பினை ஏற்பவர்களுக்கான அதிகாரம் குறித்தாவது விதிமுறையை மனிதநேயத்துடன் வகுத்து அதனை உறுதியுடன் கடைப்பிடிக்க வேண்டும் என்பதையாவது வலியுறுத்தி இருக்க வேண்டும். அதனையும் செய்யவில்லை.

காவல்துறையில் உளவாளியாக இருப்பவர்கள் சொந்த வாழ்க்கை குறித்த உளவியல் மேலாண்மையை திறம்பட கையாளுவார்கள். அதனை பிரதிபலிப்பதை போல் காட்சிகள் இல்லாமல்… அதுபோன்ற உளவாளி சாதாரண மக்களைப் போல் உணர்வு குவியலாக பழனிவேல் கதாபாத்திரத்தை வடிவமைத்திருப்பதும் பலவீனம். இதனை ‘தியேட்டரிக்கல் மொமெண்ட்ஸாக.. வொர்க் அவுட் ஆகும் என இயக்குநர் நினைத்திருக்கலாம். ஆனால் அதுவும் பலனளிக்கவில்லை.

உச்சக்கட்ட எக்சன் காட்சியில்.. சண்டை பயிற்சி இயக்குநர்-  இயக்குநர் – கதாபாத்திரங்கள்- ஆகிய மூவருக்கும் இடையே ஒருமித்து ஒன்றிணைந்து செயல்படாததால்.. ஜொலிக்க வேண்டிய உச்சகட்ட காட்சி ….! ?

நித்யா ரெட்டியின் கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் நடிகை சாய் பல்லவியின் படைப்பில் ‘டெம்ப்ளேட்’ தனம் தெரிகிறது. அந்த கதாபாத்திரத்திற்கு இதுதான் நிகழும் என பாமர ரசிகன் கூட எளிதாக யூகிப்பது …அந்த கதாபாத்திரத்தின் நோக்கத்தை சிதைக்கிறது. 

பழனிவேல் – திருக்குமரன் என பெயரை மாற்றி திரையில் தோன்றினாலும்… திருக்குமரனை விட பழனிவேல் தான் ரசிகர்களின் மனதில் இடம் பிடிக்கிறார். அதிலும் தனது தந்தை ஆந்திர மாநில காவல் துறையின் துப்பாக்கி சூட்டிற்கு பலியான பிறகு, அவருடைய சடலத்தை சம்பவ இடத்தில் இருந்து மீட்டு, அதற்கு இறுதி சடங்கு செய்து, தன்னை சுய பரிசோதனை செய்து கொள்ளும் இடத்தில் தனுஷின் நடிப்பு… வழக்கத்தை விட சிறப்பு. 

பர்மா கார்த்தி@கார்த்திகேயன் கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் மம்மூட்டி வழக்கம் போல் நடித்திருக்கிறார். உச்சகட்ட காட்சியில் கார்த்திகேயன் – திருக்குமரனை பற்றியும்… நித்யா ரெட்டியை பற்றியும்… என்ன நினைக்கிறார்? என்பதை துல்லியமான முக பாவனைகள் வெளிப்படுத்த தவறி இருக்கிறார்.

கார்த்திகேயனின் மனைவியாக நடித்திருக்கும் தெலுங்கு நடிகை ரேணு தேசாயின் திரை தோற்றம் சுகம்.

பழனிவேல் கதாபாத்திரத்தின் மனைவி ரோஜாவாக நடித்திருக்கும் ஸ்ரீ லீலாவின் கதாபாத்திரம் தனித்துவமாக வடிக்கப்பட்டிருக்கிறது. அதிலும் பழனிவேல் தந்தை இறந்த பிறகு ரோஜா கதாபாத்திரம் பேசும் ஒரு உரையாடல் ரசிகர்களை உணர்ச்சி வசப்பட வைக்கிறது. ( நீ உன்ன அனாதேன்னு சொல்லிக்காத. நான் உன் அப்பாவோட அக்கா மவ. நாம கல்யாணம் பண்ணிக்காம இருந்தாலும்.. உனக்கு உறவுன்னு நான் இருந்திருப்பேன்..)

செம்மர கட்டை கடத்தல் கும்பலின் சர்வதேச தலைவன் அப்துல் ஹமீதாக நடித்திருக்கும் பொலிவுட் நடிகர் நஸ்ருதீன் ஷா வழக்கம்போல் சிறப்பாக நடித்திருக்கிறார். 

லாஜிக்காக ஒரு கோடி கேள்விகள் ரசிகர்களின் மனதில் எழுந்தாலும் தனுஷ்- சாய் பல்லவி- மம்முட்டி- ஆகியோர் திரையில் நிகழ்த்தும் மேஜிக் மற்றும் நட்பில் ஏற்படும் பிரிவு தற்காலிகமானது தான் என இயக்குநர் சொல்வதும் ரசிகர்களை சிறிதளவு உற்சாகப்படுத்த தான் செய்கிறது.

கே. எழில் அரசின் ஒளிப்பதிவு சிறப்பாக இருந்தாலும்.. ரசிகர்களுக்கு விருந்தாக இருக்க வேண்டிய சாய் அபயங்கரின் பின்னணி இசை…!?

ஓம் – ரசிகர்களை வசப்படுத்தும் மந்திரம் அல்ல

Previous Post

சீ ஹோக்ஸ் – ரெட் ஸ்டார் போட்டியுடன் இன்று முதல் மீண்டும் சுப்பர் லீக் ஆரம்பம்

  • Trending
  • Comments
  • Latest
வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

May 20, 2022
ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

March 8, 2023
கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

June 6, 2023
ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

July 28, 2023
இராணுவ ஆட்சியின் பக்கம் நாடு பயணிப்பதை தடுக்க வேண்டும் – அநுரகுமார

மக்களின் எதிர்ப்பை தாக்குப்பிடிக்க முடியாத ‘கோட்டா ‘பதுங்கு குழியில் | அனுரகுமார

புலிகளுக்கு எதிரான போர் போன்று இனி உலகில் நடப்பதற்கு வாய்ப்பில்லை!

புலிகளுக்கு எதிரான போர் போன்று இனி உலகில் நடப்பதற்கு வாய்ப்பில்லை!

தமிழ் கைதிகளுக்கு மன்னிப்பு வழங்க முடியாது: கோத்தபாய ராஜபக்ஸ.

விளையாட்டு வினையான சம்பவம்: 4 வயது தம்பியை தவறுதலாக சுட்டுக்கொன்ற சகோதரன்.

ஓம் – திரைப்பட விமர்சனம்

ஓம் – திரைப்பட விமர்சனம்

November 21, 2026
சீ ஹோக்ஸ் – ரெட் ஸ்டார் போட்டியுடன் இன்று முதல் மீண்டும் சுப்பர் லீக் ஆரம்பம்

சீ ஹோக்ஸ் – ரெட் ஸ்டார் போட்டியுடன் இன்று முதல் மீண்டும் சுப்பர் லீக் ஆரம்பம்

November 21, 2026
முதல் முறையாக இடைத்தேர்தலைச் சந்திக்கும் கொளத்தூர் தொகுதி: ஸ்டாலின் மீண்டும் போட்டியிட விருப்பம்!

முதல் முறையாக இடைத்தேர்தலைச் சந்திக்கும் கொளத்தூர் தொகுதி: ஸ்டாலின் மீண்டும் போட்டியிட விருப்பம்!

November 21, 2026
இந்தோனேசியாவில் பிரம்மாண்ட விநாயகர் சிலை – கின்னஸ் அங்கீகாரம் பெற்ற தனித்துவமான கலைப்படைப்பு!

இந்தோனேசியாவில் பிரம்மாண்ட விநாயகர் சிலை – கின்னஸ் அங்கீகாரம் பெற்ற தனித்துவமான கலைப்படைப்பு!

November 21, 2026

Recent News

ஓம் – திரைப்பட விமர்சனம்

ஓம் – திரைப்பட விமர்சனம்

November 21, 2026
சீ ஹோக்ஸ் – ரெட் ஸ்டார் போட்டியுடன் இன்று முதல் மீண்டும் சுப்பர் லீக் ஆரம்பம்

சீ ஹோக்ஸ் – ரெட் ஸ்டார் போட்டியுடன் இன்று முதல் மீண்டும் சுப்பர் லீக் ஆரம்பம்

November 21, 2026
முதல் முறையாக இடைத்தேர்தலைச் சந்திக்கும் கொளத்தூர் தொகுதி: ஸ்டாலின் மீண்டும் போட்டியிட விருப்பம்!

முதல் முறையாக இடைத்தேர்தலைச் சந்திக்கும் கொளத்தூர் தொகுதி: ஸ்டாலின் மீண்டும் போட்டியிட விருப்பம்!

November 21, 2026
இந்தோனேசியாவில் பிரம்மாண்ட விநாயகர் சிலை – கின்னஸ் அங்கீகாரம் பெற்ற தனித்துவமான கலைப்படைப்பு!

இந்தோனேசியாவில் பிரம்மாண்ட விநாயகர் சிலை – கின்னஸ் அங்கீகாரம் பெற்ற தனித்துவமான கலைப்படைப்பு!

November 21, 2026
  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures