கொளத்தூர் தொகுதி தமிழக வெற்றிக் கழகத்தின் எம்.எல்.ஏ, வி.எஸ்.பாபு உடல்நலக் குறைவால் இன்று (19) வியாழக்கிழமை பிற்பகல் வைத்தியசாலையில் காலமானதாக இந்திய ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
வி.எஸ்.பாபு சட்டசபை தேர்தலில் முன்னாள் முதல்வர் ஸ்டாலினை தோற்கடித்ததால் தமிழகம் முழுவதும் அறியப்பட்டார்.
உடல்நலக் குறைவால் செப்டம்பர் 9 ஆம் திகதி சென்னை அம்பத்தூரில் உள்ள வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்.
இந்நிலையில் வி.எஸ்.பாபு இன்று(19) பிற்பகல் சிகிச்சை பலனின்றி வைத்தியசாலையில் காலமானார்.
2006 முதல் 2011 வரை திமுக எம்.எல்.ஏ ஆக இருந்துள்ளார். 2011 வரை வட சென்னை மாவட்ட திமுக செயலாளர் பதவி வகித்துள்ளார். கொளத்தூர் தொகுதியில் ஸ்டாலினுக்காக பணியாற்றினார். திமுகவில் இருந்து நீக்கப்பட்டதை தொடர்ந்து 2016 இல் அதிமுகவில் இணைந்தார்.
2026 பெப்ரவரி 7 இல் தவெகவில் இணைந்து கொளத்தூர் தொகுதியில் ஸ்டாலினை எதிர்த்து போட்டியிட்டு வெற்றி பெற்றார் என்பதும் குறிப்பிடத்தக்கது.













