Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home Cinema

ரணபாலி – திரைப்பட விமர்சனம்

October 18, 2026
in Cinema, News, இந்தியா, முக்கிய செய்திகள்
0
ரணபாலி – திரைப்பட விமர்சனம்

தயாரிப்பு : மைத்ரி மூவி மேக்கர்ஸ்

நடிகர்கள் : விஜய் தேவரகொண்டா, ராஷ்மிகா மந்தானா, அர்னால்ட் வோஸ்லோ, ஈஸ்வரி ராவ், மற்றும் பலர்.

இயக்கம் : ராகுல் சங்கிருத்தியன்

மதிப்பீடு : 2.5/5

இந்தியாவை ஆங்கிலேயர்கள் ஆட்சி செய்த போது ‘திட்டமிட்டு மறைக்கப்பட்ட வரலாறு இது’ என்ற அறிவிப்புடன் விஜய் தேவரகொண்டா- ராஷ்மிகா மந்தானா ஆகிய நட்சத்திர தம்பதிகளின் நடிப்பில் வெளியாகி உள்ள ‘ரணபாலி’ திரைப்படம் – ரசிகர்களிடம் எம்மாதிரியான தாக்கத்தை ஏற்படுத்தியது என்பதை தொடர்ந்து பார்ப்போம்.

தென்னிந்தியாவில் உள்ள மெட்ராஸ் மாகாணத்திற்கு அந்தப் பகுதி காவல் தெய்வமான பரத் மல்லண்ணாவின் பரிபூரண ஆசியுடன் சிங்கனமாலா பொப்பிலி ரணபாலி (விஜய் தேவரகொண்டா) வின் பிறப்பு நிகழ்கிறது. அவன் நாளடைவில் சாபம் பெற்ற அந்த நிலவியல் பகுதிக்கு தனிப்பெரும் நாயகனாக உருமாறுகிறான்.

இந்தத் தருணத்தில் ஆங்கிலேயர்களின் ஆட்சியில் இங்கு அதிகாரியாக நியமிக்கப்பட்ட சர் தியோடர் ஹெக்டர் ( அர்னால்ட் வோஸ்லோ) தானிய ஏற்றுமதியை ஊக்குவிக்கும் வகையில் திட்டமிட்டு 1876- 78 காலகட்டத்தில் செயற்கையான பஞ்சத்தை உருவாக்குகிறார். இதனை ரணபாலி கண்டறிந்து பிரித்தானியர்களின் அதிகாரத் துஷ்பிரயோக அத்துமீறல்களை எதிர்த்து போராடி தன்னுடைய மக்களையும், தாய் நாட்டையும் எப்படி காப்பாற்றினார்? என்பதை விவரிப்பது தான் இப்படத்தின் கதை.

இதனிடையே பிரித்தானிய அரசாங்கம் இந்தியாவில் புகையிரத பாதைகளை ஏன் உருவாக்கியது? அதன் பின்னணி என்ன? இந்தியாவிலிருந்து இங்கிலாந்துக்கு தானியங்கள் ஏற்றுமதி செய்யப்பட்டனவா? அதை தடுப்பதற்காக ரணபாலி எடுத்த முயற்சி வெற்றி பெற்றதா? இல்லையா? என்பதையும் இப்படம் விவரிக்கிறது.

1876 -78 காலகட்டத்தில் மெட்ராஸ் மாகாணத்தில் ஏற்பட்ட பஞ்சம் குறித்தும், அதன் பின்னணி குறித்தும் இதற்கு முன்னர் வெளியான திரைப்படங்களில் காட்சிப்படுத்தி இருப்பதற்கான வாய்ப்பு இல்லை. அதனை நேர் நிலையாக விவரித்ததற்காக இயக்குநரை பாராட்டலாம்.

படத்தின் முதல் பகுதியில் நாயகன் அறிமுகம், எக்சன், பாடல் என இருந்தாலும், வில்லன் அறிமுகத்திற்குப் பிறகு திரைக்கதை டாப் கியரில் பறக்கிறது. ஒவ்வொரு காட்சியும் ரசிகர்களை வியப்பில் ஆழ்த்தி அற்புதமான பட மாளிகை அனுபவங்களை வழங்குகிறது.

ஆனால் இரண்டாம் பாதியில் குகையில் நடைபெறும் எக்சன் காட்சிகளைத் தவிர, திரைக்கதை வழக்கம் போல் பார்வையாளர்கள் எளிதில் யூகிக்கும் வகையில் பயணிப்பதால் எதிர்பார்ப்பு குறைந்து சோர்வும், அயர்ச்சியும் ஏற்படுகிறது.

முதல் பாதியில் அதிகமாக மெனக்கெட்ட இயக்குநர், இரண்டாம் பாதியில் ஆங்கிலேயர் எதிர்ப்பும், தேசபக்தியும் கை கொடுக்கும் என நம்பி இருக்கிறார். ஆனால் அது ரசிகர்களின் எதிர்பார்ப்பிற்கு ஏற்ற தீனியாக இல்லாததால், பொறுமையை சோதிக்கிறது. அதிலும் இரண்டாம் பாகத்தின் நீளம் ரசிகர்களை எரிச்சலடைய செய்கிறது.

விஜய் தேவரகொண்டாவும், ராஷ்மிகா மந்தானாவிற்கும் இடையேயான கெமிஸ்ட்ரி திரையில் அற்புதமாக வேலை செய்து ரசிகர்களை உற்சாகப்பட வைக்கிறது. அதிலும் ஜெயம்மா கதாபாத்திரத்தில் தன்னை நேர்த்தியாக பொருத்திக்கொண்டு ராஷ்மிகா மந்தானா நிகழ்த்தும் திரைஜாலம் ரசிக்க வைக்கிறது.

முதல் பாதியின் இடைவேளை காட்சியில் வரும் உணர்வுபூர்வமான விடயமும்… அது தொடர்ந்த எக்சன் காட்சிகளும் ரசிகர்களை ‘அட..’ போட வைக்கிறது.

இரண்டாம் பாதியை பற்றிய எதிர்பார்ப்பையும் உருவாக்குகிறது. ஆனால் இரண்டாம் பாதி தொடங்கியவுடன் குகையில் நடைபெறும் சண்டைக் காட்சிக்கு பிறகு திரைக்கதை வழக்கமான பாதைக்கு திரும்புவதால் ரசிகர்கள் பலர் படமாளிகையில் ‘அப்செட்’. அதிலும் சில காட்சிகள் திரும்ப திரும்ப இடம்பெறுவது சலிப்பை ஏற்படுத்துகிறது.

சர் தியோடர் ஹெக்டர் கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் தென்னாப்பிரிக்க நடிகர் அர்னால்டு வோஸ்லோ.. தன் பங்களிப்பை சிறப்பாக செய்திருக்கிறார்.

இரண்டாம் பாதியில் இயக்குநர் அறிமுகப்படுத்தும் ‘கோபாலி’ எனும் அத்தியாயம் – பார்வையாளர்களிடத்தில் எந்த தாக்கத்தையும் ஏற்படுத்தாமல், சாதாரணமாக கடந்து செல்கிறது.

அத்துடன் மெகா ஸ்டார் சிரஞ்சீவி நடிப்பில் தயாராகி, தமிழில் மொழி மாற்றம் செய்து வெளியிடப்பட்ட ‘சை ரா நரசிம்ம ரெட்டி ‘ திரைப்படத்தினை பல இடங்களில் நினைவு படுத்துகிறது.

ஒளிப்பதிவு -பின்னணி இசை- பாடல்கள்- கலை இயக்கம்- ஆகியவை சர்வதேச தரத்தில் அமைந்திருக்கிறது. இதற்கு தாராளமாக பாராட்டு தெரிவிக்கலாம். ஆனால் வி எஃப் எக்ஸ் தொழில்நுட்பத்தை மேலும் துல்லியமாக பாவித்திருக்கலாமோ..!? என்ற எண்ணத்தையும் ஏற்படுத்துகிறது. 

ஆங்கிலேயர்கள் ஏனைய நாடுகளை ஆக்கிரமித்து தங்களுடைய வணிக நலன்களை எப்படி மேம்படுத்திக் கொண்டார்கள் என்பதை சற்று நம்பகத் தன்மையுடன் விவரிக்கப்பட்டிருந்தாலும் அதில் சினிமா எனும் வலிமை மிக்க வெகுஜன ஊடகத்திற்கு தேவையான சில விடயங்கள், தேவையான அளவு கலக்கப்படாததால்… ரணபாலி முதல் பாதியில் மட்டுமே சிங்கமாக கர்ஜிக்கிறார்.

ரணபாலி – ஆங்கிலேயரை எதிர்த்துப் போரிட்ட பாளையக்காரன்.

Previous Post

இசையமைப்பாளர் தேனிசைத் தென்றல் தேவா காலமானார் – அதிர்ச்சியில் திரையுலகம்

Next Post

ஜனாதிபதி அநுரவுக்கு ஆதரவாக ‘ஜனவரம புரவசியோ’ மாபெரும் பேரணி

Next Post
மூலதனச் செலவினத்தை அதிகரிக்கும் நோக்குடன் அடுத்தாண்டுக்கான பொருளாதாரத் திட்டங்கள் தயாரிப்பு |   அநுர

ஜனாதிபதி அநுரவுக்கு ஆதரவாக 'ஜனவரம புரவசியோ' மாபெரும் பேரணி

  • Trending
  • Comments
  • Latest
வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

May 20, 2022
ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

March 8, 2023
கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

June 6, 2023
ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

July 28, 2023
இராணுவ ஆட்சியின் பக்கம் நாடு பயணிப்பதை தடுக்க வேண்டும் – அநுரகுமார

மக்களின் எதிர்ப்பை தாக்குப்பிடிக்க முடியாத ‘கோட்டா ‘பதுங்கு குழியில் | அனுரகுமார

50,000 டொலர்களுக்கு மேலாக சரவணபவன் என்ற உணவகத்தின் சார்பாக அதன் தலைவர் மாண்புமிகு திரு கணேஷன் சுகுமார் அவர்கள் வைத்தியசாலை அதிகாரிகளிடம் அந்த நிதி உதவியினை வழங்கியிருப்பதனையும் இவ்வாறான நிதி அன்பளிப்பு செய்யும் நடவடிக்கை தொடர்ந்து சரவணபவன் என்ற உணவகத்தினால் மேற்கொள்ளப்பட்டு வருவது பாராட்டுதல்களுக்குரியதாகும்.

கனடாவில் மட்டுமன்றி உலகளாவியரீதியில் பல கிளை நிறுவனங்களை கொண்ட Skymoon Travels and Tours என்ற நிறுவனத்தின் உரிமையாளரும் பிரபல தொழில் அதிபருமான Andrew அவர்களின் அதீத ஆசையின் பிரகாரமே LUCID NIGHTSஇசைக்குழு என்ற ஆரம்பிக்கப்பட்டது.

கொவிட் வைரஸின் புதிய பிறழ்வு ‘நியோகோவ்’ குறித்து வுஹான் விஞ்ஞானிகள் எச்சரிக்கை

கொரோனா தொற்று பாதிப்புக்கு பிறகு அதிகரிக்கும் சர்க்கரை நோய், ஞாபக மறதி, சுவாச பிரச்சினைகள் | அப்போலோ மருத்துவர்கள்

மூலதனச் செலவினத்தை அதிகரிக்கும் நோக்குடன் அடுத்தாண்டுக்கான பொருளாதாரத் திட்டங்கள் தயாரிப்பு |   அநுர

ஜனாதிபதி அநுரவுக்கு ஆதரவாக ‘ஜனவரம புரவசியோ’ மாபெரும் பேரணி

October 18, 2026
ரணபாலி – திரைப்பட விமர்சனம்

ரணபாலி – திரைப்பட விமர்சனம்

October 18, 2026
இசையமைப்பாளர் தேனிசைத் தென்றல் தேவா காலமானார் – அதிர்ச்சியில் திரையுலகம்

இசையமைப்பாளர் தேனிசைத் தென்றல் தேவா காலமானார் – அதிர்ச்சியில் திரையுலகம்

October 17, 2026
மும்பை இந்தியன்ஸ் தலைமைப் பயிற்றுவிப்பாளர் பதவியிலிருந்து மஹேல விலகல்

மும்பை இந்தியன்ஸ் தலைமைப் பயிற்றுவிப்பாளர் பதவியிலிருந்து மஹேல விலகல்

October 17, 2026

Recent News

மூலதனச் செலவினத்தை அதிகரிக்கும் நோக்குடன் அடுத்தாண்டுக்கான பொருளாதாரத் திட்டங்கள் தயாரிப்பு |   அநுர

ஜனாதிபதி அநுரவுக்கு ஆதரவாக ‘ஜனவரம புரவசியோ’ மாபெரும் பேரணி

October 18, 2026
ரணபாலி – திரைப்பட விமர்சனம்

ரணபாலி – திரைப்பட விமர்சனம்

October 18, 2026
இசையமைப்பாளர் தேனிசைத் தென்றல் தேவா காலமானார் – அதிர்ச்சியில் திரையுலகம்

இசையமைப்பாளர் தேனிசைத் தென்றல் தேவா காலமானார் – அதிர்ச்சியில் திரையுலகம்

October 17, 2026
மும்பை இந்தியன்ஸ் தலைமைப் பயிற்றுவிப்பாளர் பதவியிலிருந்து மஹேல விலகல்

மும்பை இந்தியன்ஸ் தலைமைப் பயிற்றுவிப்பாளர் பதவியிலிருந்து மஹேல விலகல்

October 17, 2026
  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures