புதையல் தோண்டி எடுக்கும் நோக்கில் சட்டவிரோதமாக அகழ்வுப் பணியில் ஈடுபட்ட மூன்று சந்தேகநபர்களைப் புலத்சிங்கள பொலிஸார் நேற்று வெள்ளிக்கிழமை (21) கைது செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
புலத்சிங்கள பொலிஸ் பிரிவிற்குட்பட்ட போதலேகம பகுதியில் கிடைக்கப்பெற்ற இரகசியத் தகவலின் அடிப்படையில் பொலிஸ் குழுவினரால் மேற்கொள்ளப்பட்ட திடீர் வளைப்பின் போதே கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்டவர்கள் புலத்சிங்கள மற்றும் தொடங்கொட பகுதிகளைச் சேர்ந்த 37, 52 மற்றும் 67 வயதுடையவர்களாவர்.
மேலும், இச் சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளில் புலத்சிங்கள பொலிஸார் ஈடுபட்டு வருகின்றனர்.










