Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

சமூக ஊடகங்களில் அவதூறு : குற்றப்புலனாய்வு பிரிவில் கெமுனு விஜேரத்ன முறைப்பாடு!

August 16, 2026
in News, Sri Lanka News, முக்கிய செய்திகள்
0
முறைப்பாடுகளால் நிரம்பி வழியும் சிஐடி! திறக்கப்பட்டது புதிய விசாரணை பிரிவு

இலங்கை தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கத்தின்  தலைவர் கெமுனு விஜேரத்ன, சமூக ஊடகங்களில் தனக்கு எதிராக மேற்கொள்ளப்பட்டு வரும் அவதூறுப் பிரசாரங்கள் குறித்து குற்றப்புலனாய்வு பிரிவில் முறைப்பாடு ஒன்றைப் பதிவு செய்துள்ளார்.

அண்மையில் அறிமுகப்படுத்தப்பட்ட ‘மெட்ரோ பஸ் திட்டம் தொடர்பில் அவர் வெளியிட்ட கருத்துக்களைத் தொடர்ந்து, பல்வேறு சமூக ஊடகங்களில் தனக்கு எதிராக அவதூறான கருத்துக்கள் பரப்பப்பட்டு வருவதாகக் குறிப்பிட்டே இம் முறைப்பாடு அளிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவித்த கெமுனு விஜேரத்ன,

மெட்ரோ பஸ் என்ற கருத்துப்படிமம் புதிதொன்றல்ல எனவும், தாம் ஏற்கனவே போக்குவரத்து அமைச்சிடம் இது போன்றதொரு திட்ட முன்மொழிவைச் சமர்ப்பித்திருந்ததாகவும் தெரிவித்துள்ளார்.

கடந்த 2023 ஆம் ஆண்டு ஏற்பட்ட பொருளாதார நெருக்கடியைத் தொடர்ந்து, அரசாங்கப் பணத்தைப் பயன்படுத்தாமல் சீன எக்ஸிம் வங்கியின்  நிதியுதவியுடன் இத் திட்டத்தைச் செயற்படுத்துவதற்கான திட்ட வரைபை தாம் சமர்ப்பித்ததாக அவர் சுட்டிக்காட்டினார்.

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் ஆட்சிக் காலத்திலும் இதுபோன்றதொரு முயற்சி தொடங்கப்பட்ட போதிலும், பெருமளவிலான பண விரயத்திற்கும் நஷ்டத்திற்கும் பின்னர் அத்திட்டம் கைவிடப்பட்டதாக அவர் குற்றம் சுமத்தினார்.

மேலும், தற்போது மெட்ரோ பஸ் சேவைக்காகப் பரிந்துரைக்கப்படும் பஸ்களைப் போன்ற அமைப்பைக் கொண்ட பஸ்கள், சுமார் 10 ஆண்டுகளுக்கு முன்பே தனியார் நிறுவனம் ஒன்றினால் இலங்கைக்கு இறக்குமதி செய்யப்பட்டதையும் அவர் சுட்டிக்காட்டினார்.

அக்காலகட்டத்தில் அதுபோன்ற சுமார் 60 பஸ்கள் இறக்குமதி செய்யப்பட்டதாகவும், மேலும் 20 பஸ்கள் பனகொட பகுதியிலுள்ள வளாகம் ஒன்றில் இன்னமும் பயன்பாடின்றி இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.

குறிப்பாக எரிபொருள் பயன்பாடு மற்றும் பராமரிப்புச் செலவுகளைக் கருத்திற் கொண்டு பார்க்கும்போது, இப் புதிய மெட்ரோ பஸ் திட்டத்தின் சாத்தியக்கூறுகள் மற்றும் இயங்குதளச் செலவுகள் கேள்விக்குறியாகவே உள்ளதாகத் தெரிவித்த அவர், இக் கருத்துருவாக்கம் புதியது அல்ல என்பதை மீண்டும் வலியுறுத்தினார்.

மெட்ரோ பஸ் திட்டம் குறித்து கெமுனு விஜேரத்ன வெளியிட்ட கருத்துக்கள் தொடர்பில் சமூக ஊடகங்களில் விவாதங்கள் தீவிரமடைந்துள்ள நிலையிலேயே, அவர் குற்றப்புலனாய்வு பிரிவில் முறைப்பாட்டை மேற்கொண்டுள்ளார்.

Previous Post

பலாலியில் காணிகளை விடுவிக்கக் கோரி கறுப்பாடை அணிந்து மக்கள் போராட்டம்!

Next Post

தேவ்டத் படிக்கல் கன்னிச் சதம், ராகுல் உபாதையினால் தற்காலிக ஓய்வு

Next Post
தேவ்டத் படிக்கல் கன்னிச் சதம், ராகுல் உபாதையினால் தற்காலிக ஓய்வு

தேவ்டத் படிக்கல் கன்னிச் சதம், ராகுல் உபாதையினால் தற்காலிக ஓய்வு

  • Trending
  • Comments
  • Latest
வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

May 20, 2022
ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

March 8, 2023
கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

June 6, 2023
ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

July 28, 2023
இராணுவ ஆட்சியின் பக்கம் நாடு பயணிப்பதை தடுக்க வேண்டும் – அநுரகுமார

மக்களின் எதிர்ப்பை தாக்குப்பிடிக்க முடியாத ‘கோட்டா ‘பதுங்கு குழியில் | அனுரகுமார

50,000 டொலர்களுக்கு மேலாக சரவணபவன் என்ற உணவகத்தின் சார்பாக அதன் தலைவர் மாண்புமிகு திரு கணேஷன் சுகுமார் அவர்கள் வைத்தியசாலை அதிகாரிகளிடம் அந்த நிதி உதவியினை வழங்கியிருப்பதனையும் இவ்வாறான நிதி அன்பளிப்பு செய்யும் நடவடிக்கை தொடர்ந்து சரவணபவன் என்ற உணவகத்தினால் மேற்கொள்ளப்பட்டு வருவது பாராட்டுதல்களுக்குரியதாகும்.

கனடாவில் மட்டுமன்றி உலகளாவியரீதியில் பல கிளை நிறுவனங்களை கொண்ட Skymoon Travels and Tours என்ற நிறுவனத்தின் உரிமையாளரும் பிரபல தொழில் அதிபருமான Andrew அவர்களின் அதீத ஆசையின் பிரகாரமே LUCID NIGHTSஇசைக்குழு என்ற ஆரம்பிக்கப்பட்டது.

கொவிட் வைரஸின் புதிய பிறழ்வு ‘நியோகோவ்’ குறித்து வுஹான் விஞ்ஞானிகள் எச்சரிக்கை

கொரோனா தொற்று பாதிப்புக்கு பிறகு அதிகரிக்கும் சர்க்கரை நோய், ஞாபக மறதி, சுவாச பிரச்சினைகள் | அப்போலோ மருத்துவர்கள்

ரசிகர்கள் கொண்டாடும் ‘இசை சாம்ராட்’ டி. இமானின் இசையில் உருவான ‘இன்னும் எத்தன காலம்..’

அர்ஜூன் தாஸின் கம்பீரமான குரலில் ஒலிக்கும் ‘ஒன்ஸ்மோர்’ படத்தின் ஒன்றரை நிமிட கவிதை

August 17, 2026
தமிழக முதலமைச்சர் விஜய் வெளியிட்ட புதிய அறிவிப்பு

தமிழக முதலமைச்சர் விஜய் வெளியிட்ட புதிய அறிவிப்பு

August 17, 2026
சர்வதேச விசாரணை தேவை என்ற கோரிக்கையை முன்வைத்து யாழில் “நீதியின் ஓலம்” பேரணி

சர்வதேச விசாரணை தேவை என்ற கோரிக்கையை முன்வைத்து யாழில் “நீதியின் ஓலம்” பேரணி

August 17, 2026
செம்மணி; குற்றவாளிகள் நிச்சயம் தண்டிக்கப்பட வேண்டும் – இராமலிங்கம் சந்திரசேகர்

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சூத்திரதாரிகளுக்கு அச்சம் ; அதனால் அரசாங்கத்தை வீழ்த்த முயற்சி – அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர்

August 17, 2026

Recent News

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures