வினாத்தாள் அடங்கிய பொதியானது எந்தவொரு சந்தர்ப்பத்திலும் திறக்கப்படவோ அல்லது ஒருங்கிணைப்பு மையத்திலிருந்து வெளியாகவோ இல்லை. எந்தவொரு வினாத்தாளும் எந்த வகையிலும் முன்கூட்டியே வெளியாகவில்லை என பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் இந்திகா குமாரி லியனகே தெரிவித்துள்ளார்.
விசேட அறிவிப்பை விடுத்து ஆணையாளர் நாயகம் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்,
அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது,
வினாத்தாள் அடங்கிய பொதியானது எந்தவொரு சந்தர்ப்பத்திலும் திறக்கப்படவோ அல்லது ஒருங்கிணைப்பு மையத்திலிருந்து வெளியாகவோ இல்லை. அத்துடன்,எந்தவொரு வினாத்தாளும் எந்த வகையிலும் முன்கூட்டியே வெளியாகவில்லை.
பொய்யான தகவல்களால் பதற்றமடையாமல், இன்று நடைபெறும் பரீட்சைக்கு முகங்கொடுக்குமாறு அனைத்து பரீட்சார்த்திகளுக்கும் அன்புடன் அறிவிக்கிறேன். நிர்ணயிக்கப்பட்ட அட்டவணைப்படி அனைத்து பரீட்சை மையங்களிலும் பரீட்சைகள் இடம்பெறும் என்பதால், அனைத்து பரீட்சார்த்திகளும் தமக்குரிய அட்டவணைப்படி குறித்த பரீட்சை மையங்களுக்கு சமூகமளித்து பரீட்சைக்கு முகங்கொடுக்குமாறு மிகவும் அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.













