Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

வீதி விதிமீறல்களைப் பிடிக்க செயற்கை நுண்ணறிவு கேமராக்கள் அறிமுகம்

August 2, 2026
in News, Sri Lanka News, முக்கிய செய்திகள்
0
வீதி விதிமீறல்களைப் பிடிக்க செயற்கை நுண்ணறிவு கேமராக்கள் அறிமுகம்

மோட்டார் வாகன விபத்துக்களைத் தடுப்பதற்கும் சாரதிகளால் மேற்கொள்ளப்படும் விதிமீறல்களைக் கண்டறிவதற்கும் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்துடன் கூடிய நவீன கேமரா அமைப்பைப் பொருத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது என்று வீதிப்போக்குவரத்து கட்டுப்பாடு மற்றும் வீதிப் பாதுக்காப்பு பிரிவுப் பணிப்பாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் மனோஜ் ரணகல தெரிவித்துள்ளார்.

இது குறித்து ஞாயிற்றுக்கிழமை (02) ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில்,

இந்த புதிய கண்காணிப்பு நடைமுறையின் கீழ் வாகனங்களைச் செலுத்தும் போது தொலைபேசியில் பேசுவது அல்லது குறுஞ்செய்தி அனுப்புவது போன்ற ஆபத்தான செயல்களில் ஈடுபடும் சாரதிகள் இந்த செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்ப கேமராக்கள் மூலம் துல்லியமாக அடையாளம் காணப்பட்டு படம் பிடிக்கப்படுவார்கள்.

வழக்கமான கேமராக்களைப் போலன்றி, செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பம் மூலம் வீதி விதிமீறல்கள் உடனடியாகப் படம்பிடிக்கப்பட்டு சான்றுகளுடன் சேமிக்கப்படுவதால், தவறிழைக்கும் சாரதிகள் சட்டத்தின் பிடியிலிருந்து தப்பிக்க முடியாது.

இத்திட்டம் முதற்கட்டமாக கொழும்பு மாநகர எல்லைக்குட்பட்ட அதிமுக்கியத்துவம் வாய்ந்த 9 பிரதான சந்திப்புகள் மற்றும் வீதிகளில் ஆரம்பிக்கப்படவுள்ளது. இதன் மூலம் கொழும்பு நகரில் இடம்பெறும் அதிகளவிலான போக்குவரத்து விதிமீறல்கள் மற்றும் விபத்துக்களை வெகுவாகக் குறைக்க முடியும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதேவேளை வீதி விபத்துக்களைக் கட்டுபடுத்தும் நோக்கில், வாகனங்களின் வேகத்தை கண்டறிவதற்காக புதிதாக 50 வேகமானி கருவிகளை இறக்குமதி செய்ய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது.

இதற்கு முன்னர் போக்குவரத்துப் பொலிஸாரால் 45 வேகமானி கருவிகள் மட்டுமே பயன்பாட்டில் ஈடுபடுத்தப்பட்டிருந்த நிலையில், தற்போது மேலும் 50 கருவிகள் சேர்க்கப்படுகின்றன. 45 இத்தகைய கருவிகள் சேவையில் ஈடுபடுத்தப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. அமெரிக்காவிலிருந்து இறக்குமதி செய்யப்படவுள்ள இந்த கருவிகளில் ஒன்றின் விலை சுமார் 33 இலட்சம் ரூபாவாகும் என்றார்.

Previous Post

மீண்டும் ஒரு 1983 ஜூலை நிகழ்வதற்கான எந்தவொரு சாத்தியத்தையும் தடுத்தல்

Next Post

282 கிலோகிராமிற்கும் அதிகளவான போதைப்பொருளுடன் சந்தேகநபர் ஒருவர் கைது!

Next Post
போதைப்பொருள் உட்கொண்டு வாகனங்களை செலுத்திய 790 சாரதிகள் கைது

282 கிலோகிராமிற்கும் அதிகளவான போதைப்பொருளுடன் சந்தேகநபர் ஒருவர் கைது!

  • Trending
  • Comments
  • Latest
வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

May 20, 2022
ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

March 8, 2023
கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

June 6, 2023
ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

July 28, 2023
இராணுவ ஆட்சியின் பக்கம் நாடு பயணிப்பதை தடுக்க வேண்டும் – அநுரகுமார

மக்களின் எதிர்ப்பை தாக்குப்பிடிக்க முடியாத ‘கோட்டா ‘பதுங்கு குழியில் | அனுரகுமார

50,000 டொலர்களுக்கு மேலாக சரவணபவன் என்ற உணவகத்தின் சார்பாக அதன் தலைவர் மாண்புமிகு திரு கணேஷன் சுகுமார் அவர்கள் வைத்தியசாலை அதிகாரிகளிடம் அந்த நிதி உதவியினை வழங்கியிருப்பதனையும் இவ்வாறான நிதி அன்பளிப்பு செய்யும் நடவடிக்கை தொடர்ந்து சரவணபவன் என்ற உணவகத்தினால் மேற்கொள்ளப்பட்டு வருவது பாராட்டுதல்களுக்குரியதாகும்.

கனடாவில் மட்டுமன்றி உலகளாவியரீதியில் பல கிளை நிறுவனங்களை கொண்ட Skymoon Travels and Tours என்ற நிறுவனத்தின் உரிமையாளரும் பிரபல தொழில் அதிபருமான Andrew அவர்களின் அதீத ஆசையின் பிரகாரமே LUCID NIGHTSஇசைக்குழு என்ற ஆரம்பிக்கப்பட்டது.

கொவிட் வைரஸின் புதிய பிறழ்வு ‘நியோகோவ்’ குறித்து வுஹான் விஞ்ஞானிகள் எச்சரிக்கை

கொரோனா தொற்று பாதிப்புக்கு பிறகு அதிகரிக்கும் சர்க்கரை நோய், ஞாபக மறதி, சுவாச பிரச்சினைகள் | அப்போலோ மருத்துவர்கள்

கிளாஸ்கோவில் கோலூன்றிப் பாய்தலில் சாதிப்பாரா தேசிய சாதனை வீரர் புவிதரன்?

கிளாஸ்கோவில் கோலூன்றிப் பாய்தலில் சாதிப்பாரா தேசிய சாதனை வீரர் புவிதரன்?

August 2, 2026
போதைப்பொருள் உட்கொண்டு வாகனங்களை செலுத்திய 790 சாரதிகள் கைது

282 கிலோகிராமிற்கும் அதிகளவான போதைப்பொருளுடன் சந்தேகநபர் ஒருவர் கைது!

August 2, 2026
வீதி விதிமீறல்களைப் பிடிக்க செயற்கை நுண்ணறிவு கேமராக்கள் அறிமுகம்

வீதி விதிமீறல்களைப் பிடிக்க செயற்கை நுண்ணறிவு கேமராக்கள் அறிமுகம்

August 2, 2026
மீண்டும் ஒரு 1983 ஜூலை நிகழ்வதற்கான எந்தவொரு சாத்தியத்தையும் தடுத்தல்

மீண்டும் ஒரு 1983 ஜூலை நிகழ்வதற்கான எந்தவொரு சாத்தியத்தையும் தடுத்தல்

August 2, 2026

Recent News

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures