ஸ்கொட்லாந்தில் நடைபெற்று வரும் கிளாஸ்கோ 2026 பொதுநலவாய விளையாட்டு விழாவில் ஆண்களுக்கான F42 வகை மாற்றுத்திறனாளிகள் தட்டெறிதல் போட்டியில் இலங்கையின் பாலித்த பண்டார வெள்ளிப் பதக்கத்தை வென்று வரலாறு படைத்துள்ளார்.
அப் போட்டியில் பாலித்த பண்டார தனது முதலாவது முயற்சியில் 46.84 மீற்றர் தூரத்திற்கு தட்டை எறிந்ததன் மூலம் 992 புள்ளிகளைப் பெற்று வெள்ளிப் பதக்கத்தை தனதாக்கிக்கொண்டார்.
இதன் மூலம் இலங்கைக்கான முதலாவது பதக்கத்தை வென்கொடுத்தவர் என்ற பெருமைமை பாலித்த பண்டார பெற்றுக்கொண்டார்.
பொதுநலவாய விளையாட்டு விழா வரலாற்றில் அவர் வென்றெடுத்த இரண்டாவது தொடர்ச்சியான பதக்கம் இதுவாகும்.
பேர்மிங்ஹாம் 2022 பொதுநலவாய விளையாட்டு விழாவிலும் பாலித்த பண்டார வெள்ளிப் பதக்கத்தை வென்றிருந்தார்.












