ஒப்பற்ற குணச்சித்திர நடிப்பின் மூலம் ரசிகர்களைக் கவர்ந்து முன்னணி நட்சத்திர நடிகராக உயர்ந்து வரும் நடிகர் காளி வெங்கட் கதையின் நாயகனாக நடிக்கும் புதிய திரைப்படத்திற்கு, ‘குக்கர்’ என பெயரிடப்பட்டு, அதன் டைட்டில் லுக் வெளியிடப்பட்டுள்ளது. இதனை தமிழகத்தின் முன்னாள் முதல்வரும், திமுகவின் தலைவருமான மு க ஸ்டாலின் வெளியிட்டிருக்கிறார்.
இயக்குநரும், நடிகருமான கரு. பழனியப்பன் சிறிய இடைவேளைக்குப் பிறகு மீண்டும் ‘குக்கர்’ எனும் பெயரிலான புதிய திரைப்படத்தை இயக்குகிறார். இந்தத் திரைப்படத்தில் காளி வெங்கட் முதன்மையான வேடத்தில் நடிக்கிறார். இந்த படத்தில் பணியாற்றும் ஏனைய நடிகர், நடிகைகள், தொழில்நுட்ப கலைஞர்கள் குறித்த அறிவிப்பு விரைவில் அதிகாரப்பூர்வமாக வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
தமிழகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டவுடன் திராவிடக் கொள்கைகளை மேடைகளிலும்… கருத்தரங்கங்களிலும்… பட்டிமன்றங்களிலும் … தொடர்ந்து முன்வைத்த படைப்பாளி கரு. பழனியப்பன்- சிறிய இடைவெளிக்குப் பிறகு மீண்டும் திரைப்படம் ஒன்றை இயக்குவதால்… இந்தப் படைப்பு இன்றைய இளம் ரசிகர்களை கவரும் வகையில் இருக்குமா? அல்லது இன்றைய இளம் தலைமுறையினரால் ஓ ஜி என்று வழங்கப்படும் கரு. பழனியப்பனின் ஸ்டைலில் இருக்குமா ?என்பதை தெரிந்து கொள்ள காத்திருக்க வேண்டும்.










